சூர்யா 42 ஹீரோயின் இவரா?...அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு

சென்னை : சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் கன்னியாகுமரியில் முடிக்கபட்ட நிலையில் அடுத்த கட்ட ஷுட்டிங் கோவாவில் துவங்கப்படும் என சொல்லப்பட்டது.

Recommended Video

Suriya | என்ன விட Karthi Better Actor அரங்கை அதிரவைத்த Surya | Viruman Launch | *Launch

ஆனால் இதுவரை துவங்கப்படவில்லை. இதற்கு காரணம், கதையில் சில மாற்றங்களை கொண்டு வர பாலா நினைத்துள்ளதால், அதற்கான வேலைகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் வணங்கான் அடுத்த கட்ட ஷுட்டிங் துவங்க இன்னும் சில காலம் ஆகலாம் என தெரிகிறது.

இதனால் சூர்யா அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை தான் துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறனும் மற்ற வேலைகளில் பிஸியாக உள்ளதால் சூர்யாவின் அடுத்த படம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

சூர்யா 42 ஷுட்டிங்

சூர்யா 42 ஷுட்டிங்

இதற்கிடையில் நீண்ட காலமாக ஆரம்பிக்கப்படாமல் நிலுவையில் இருந்த சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. லேட்டஸ்ட் தகவலின் படி ஆகஸ்ட் 22 ம் தேதி சூர்யா 42 படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இசையமைப்பாளர் இவரா

இசையமைப்பாளர் இவரா

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹீரோயின் இவர் தானா

ஹீரோயின் இவர் தானா

தற்போது சூர்யா- சிறுத்தை சிவா இணையும் படத்தில் நாயகியாக நடிக்க போகும் அந்த நடிகை யார் என்ற தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு ட்ரீட் கன்ஃபார்ம்

ரசிகர்களுக்கு ட்ரீட் கன்ஃபார்ம்

தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி உள்பட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள திஷா பதானி இந்த படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சோஷியல் மீடியாவில் படுபயங்கர கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் திஷா பதானி, சூர்யா பட ஹீரோயினா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.அப்போ கவர்ச்சி ட்ரீட் கன்ஃபார்ம் என்றும் பலர் சொல்லி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X