»   »  ரஜினியின் கபாலி கதை இதுவா?

ரஜினியின் கபாலி கதை இதுவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் கபாலி படத்தின் டீசர் மே 1-ம் தேதி வெளியாகி, மூன்று நாட்களுக்குள் கிட்டத்தட்ட 9 மில்லியன் பார்வைகளைப் பெற்று பெரும் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியத் திரையுலகமே இந்த சாதனையை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.


கபாலியின் கதை என்ன... என்பது குறித்து யாருக்கும் பெரிதாகத் தெரியாமல் இருந்தது. இப்போது இதுதான் கபாலி கதை என்று கூறி சிலர் 'சில கதைகளை'ப் பரப்பி வருகின்றனர்.


இரண்டு வேடங்கள்

இரண்டு வேடங்கள்

இந்த படத்தில் ரஜினிகாந்த் இளமையாகவும் வயதானவராகவும் இரண்டு தோற்றங்களில் வருகிறார். அந்த தோற்றங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இளமைதோற்றம் 1980-களில் வந்த படங்களில் பார்த்த ரஜினியைப் போல் இருந்தது என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.


டான் ரஜினி

டான் ரஜினி

‘கபாலி' படத்தின் கதை ஒரு டானைப் பற்றியது என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த தகவல். படத்தின் டிசைன்களே அதைச் சொல்லிவிட்டன. ஆனால் கதை பற்றி இயக்குநர் ரஞ்சித் யாரிடமும் எதுவும் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார்.


கதை

கதை

வெளிநாடுகளுக்கு பிழைக்க சென்று சமூக விரோதிகள் பிடியில் சிக்கி அடிமைகளாக அல்லோலப்படும் தமிழர்களை வயதான தாதா ரஜினிகாந்த் எப்படி மீட்கிறார் என்பதே கதை என்று தகவல் பரவி உள்ளது.


தமிழர்களை மீட்கிறார்

தமிழர்களை மீட்கிறார்

இளமை காலத்தில் பெரிய டானாகத் திகழும் அவர், பிறகு அதில் இருந்து ஒதுங்கி ஏழைகளின் காவலனாக வாழ்கிறார். ஆனால் மலேசியாவில் தமிழர்கள் படும் கஷ்டத்தை பார்த்து மீண்டும் டானாக மாறி அவர்களை மீட்கிறார், வில்லன்களை அழிக்கிறார், என்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மலேசியாவில் பாடல்கள்

மலேசியாவில் பாடல்கள்

இந்தப் படத்தின் பாடல்கள் வரும் மே இறுதி வாரத்தில் மலேசியாவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஜூன் இறுதியில் படம் வெளியாகக்கூடும்.


English summary
Some media people have shared the story line of Rajinikanth's Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil