பிக்பாஸ் சீசன் 5...கமல் வருவாரா ? மாட்டாரா ?

சென்னை : தென்னிந்தியாவில் அதிகம் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து விட்டது.

Recommended Video

Top 5 Beats: பிக் பாஸ் 5ல் கமலுக்கு சம்பளம் இவ்வளவா? கொடி கட்டிப் பறக்கும் நயன்தாராவின் மார்க்கெட்!

விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பான கடந்த 4 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் விரைவில் துவங்கப்பட உள்ள சீசன் 5 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா என சமீப காலமாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

கமலுக்கு பதில் சிம்புவா

கமலுக்கு பதில் சிம்புவா

கமல் முழுநேர அரசியலில் இறங்கி விட்டதால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாகவும், இதற்காக சிம்புவிடம் பேச வருவதாகவும் செய்திகள் பரவின. அத்துடன் போட்டியாளர்கள் பட்டியல் என சிலவும் வெளியிடப்பட்டன.

கமல் விலகியதாக வதந்தி

கமல் விலகியதாக வதந்தி

தேர்தலுக்கு பிறகும் வரிசையால் படங்களில் நடிக்க கமல் ஒப்பந்தமாகி உள்ளதால் இனி சினிமா வேலைகளில் முழுமூச்சாக இறங்கி விடுவார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குட்பை சொல்லி விடுவார் என்றும் கூறப்பட்டது.

சீசன் 5 ம் கமல் தான்

சீசன் 5 ம் கமல் தான்

ஆனால் இந்த வதந்திகளுக்கு முடிவு கட்டும் விதமாக பிக்பாஸ் சீசன் 5 யும் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய படங்கள், அரசியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒப்பந்தத்திலும் கமல் கையெழுத்திட்டுள்ளாராம்.

கொரோனா முடியட்டும் பொறுங்க

கொரோனா முடியட்டும் பொறுங்க

அத்துடன் பட தயாரிப்பாளர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம், கொரோனா பரவல் அடங்கும் வரை சில மாதங்கள் சற்று பொறுத்திருக்குமாறு கமல் சொல்லி விட்டாராம். இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தாமதமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டும் லேட் தான்

இந்த ஆண்டும் லேட் தான்

சீசன் 5 நிகழ்ச்சியை ஜூன் மாதம் துவங்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல், லாக்டவுன் போன்ற காரணங்களால் இந்த சீசனையும் தாமதமாக துவக்கவே நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் வேலையில் இறங்கிய கமல்

விக்ரம் வேலையில் இறங்கிய கமல்

இதனால் பிக்பாஸ் துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் கமல் இறங்கி உள்ளாராம். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்தில் ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X