இது தான் விக்ரம் லேட்டஸ்ட் அப்டேட்டா...இதை எதிர்பார்க்கவேயில்லையே

சென்னை : கமலின் விக்ரம் படத்தை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், புதிய அப்டேட் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதை ஆச்சரியமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு ரிலீசாக உள்ளது. அதே சமயம் அமெரிக்காவில் பகல் 3 மணிக்கு ரிலீசாக உள்ளது.

கேன்சில் விக்ரம் டிரைலர்

கேன்சில் விக்ரம் டிரைலர்

ஃபிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சமீபத்தில் விக்ரம் டிரைலர் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழி டிரைலர்கள் வெளியிடப்பட்டது. படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருவதால் லோகேஷ் கனகராஜ் செம அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அசர வைக்கும் ப்ரோமோஷன்

அசர வைக்கும் ப்ரோமோஷன்

ஆனால் சூர்யா பற்றிய தகவல்கள், படத்தின் சூர்யாவின் ரோல் என்ன என்பது பற்றிய பல தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை வேற வெலில் தூண்டி உள்ளனர். படம் ரிலீசாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விக்ரம் படத்திற்கு அனைவரையும் அசர வைக்கும் அளவிற்கு ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.

விக்ரம் 3 வருதா

விக்ரம் 3 வருதா

இதற்கிடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமலிடம், விக்ரம் படத்தில் அந்த நான்காவது ஆள் பற்றி வதந்தி பரவி வருகிறதே என கேட்ட போது, அது வதந்தி கிடையாது உண்மை தான். அந்த நான்காவது நபர் சூர்யா தான். கடைசியில் 10 நிமிட காட்சிகளில் தான் அவர் நடித்துள்ளார். அவரது போர்ஷன் தான் கதையை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது. அது அடுத்த பாகமாக கூட இருக்கலாம் என்றார். இதனால் விக்ரம் 3 வர போகிறதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இது தான் புது அப்டேட்டா

இது தான் புது அப்டேட்டா

இந்நிலையில் விக்ரம் படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாக உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் என்ன அப்டேட்டாக இருக்கும். சூர்யா பற்றிய அப்டேட்டா என கேட்டு வந்தனர். இந்நிலையில் ரிலீசை முன்னிட்டு விக்ரம் எமோஜி ட்விட்டரில் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.

செம டிரெண்டிங்

செம டிரெண்டிங்

இதனை கொண்டாடுவதற்காக #Vikram, #VikramInAction ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் படம் பற்றிய பல தகவல்கள் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X