தலைவர் 169 ல் ரஜினிக்கு வில்லன் இவரா... கேஜிஎஃப் படத்திற்கே டஃப் கொடுக்குறாங்களே

சென்னை : ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தில் வில்லன் ரோலில் நடிக்க போகிறவர் யார் என்பது பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. உலகம் முழவதும் வசூல் சாதனை படைத்து வரும் கேஜிஎஃப் படத்திற்கே டஃப் கொடுக்கும் இந்த தகவலை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள தலைவர் 169 படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாகவும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாகவும் பிப்ரவரி மாதமே சன் பிக்சர்ஸ், ஸ்பெஷல் வீடியோ க்ளிம்ப்ஸ் உடன் அறிவிப்பு வெளியிட்டது.

ரம்யா கிருஷ்ணன் வில்லியா

ரம்யா கிருஷ்ணன் வில்லியா


ஆனால் பீஸ்ட் படத்திற்கு பிறகு நடந்த குழப்பங்கள், பரவிய வதந்திகளால் தலைவர் 169 படத்தின் கதையில் சில மாற்றங்களை, நெல்சன் செய்து வருவதாக கூறப்பட்டது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக கூறப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாகவும், படையப்பா படத்தை போல் இந்த படத்திலும் ரம்யா கிருஷ்ணன் வில்லி ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அதே போல் பிரியங்கா அருள்மோகனும் முக்கிய கேரக்டரில் ஒன்றில் நடிக்க போவதாகவும் கூறப்பட்டது.

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

தலைவர் 169 படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ஷுட்டிங்கே ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியை சந்தித்து கதை விரிவாக்கம் செய்யும் வேலைகளில் இறங்கி வருகிறாராம் நெல்சன். இதனால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

என்னது இவர் தான் வில்லனா

என்னது இவர் தான் வில்லனா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட மெகா ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனான சிவ ராஜ்குமார், தயாரிப்பாளர், நடிகர் என பலமுகங்களைக் கொண்டுள்ளார். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கன்னடத்தில் 120 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஆண்டுக்கு குறைந்த பட்சம் 3 படங்களிலாவது நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் சிவ ராஜ்குமார்.

படம் வேற லெவல் ஹிட் தான்

படம் வேற லெவல் ஹிட் தான்

தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் பெயரிடப்படாத படம் உட்பட 4 படங்களில் நடித்து வருகிறார் சிவ ராஜ்குமார். இந்த சமயத்தில் ரஜினிக்கு வில்லனாக இவர் நடிக்க போகிறார் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு வேளை தலைவர் 169 ல் நடிக்க சிவராஜ்குமார் ஓகே சொல்லிவிட்டால், படம் வேற லெவலில் ஹிட் ஆகும் என்பது மட்டும் உறுதி.

Recommended Video

KGF 2 First Day Second Show Audience Review | Yash | KGF 2 Public Review | Filmibeat tamil
 அவர் நடிக்க இதுதான் காரணமா

அவர் நடிக்க இதுதான் காரணமா

இதுவரை பாலிவுட், டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க வைத்து வந்தனர். கன்னட சினிமா என்பது கண்ணுக்கு தெரியாததாக இருந்தது. ஆனால் கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கன்னட திரையுலகின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. இதனால் கேஜிஎஃப் அளவிற்கு படத்தை ஹிட் ஆக்கவும், அனைவரின் கவனத்தையும் தலைவர் 169 பக்கம் திருப்பவும் படக்குழு பிளான் செய்திருக்கிறார்கள் போல. ஏற்கனவே விஜய்யின் தளபதி 67 படத்தில் வில்லனாக சஞ்சய் தத்திடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது சிவ ராஜ்குமாரும் தமிழில் வில்லனாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X