என்னது...தளபதி 67 வில்லன் இவரா... அடுத்த கேஜிஎஃப் 2 இதுவா தான் இருக்குமோ?

சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தில் வில்லன் யார் என்பதே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிக்காத நிலையில், தளபதி 67 படத்தின் வில்லன் யார் என்ற தகவலை இணையத்தில் கசிய விட்டுள்ளனர். இதனால் தளபதி 67 படம், எடுத்த கேஜிஎஃப் 2 ஆக இருக்குமோ என கேட்டு வெயிட்டிங்கிலேயே ரசிகர்கள வெறியேற்றி வருகின்றனர்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் ஹீரோயின் ராஷ்மிகா, விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். விஜய்யின் இரண்டு அண்ணன்களில் ஒருவராக ஷாம் நடிக்கிறார் என்பது வரை தான் இதுவரை தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 66 படத்திற்கே தெரியல

தளபதி 66 படத்திற்கே தெரியல

தளபதி 66 படத்தில் விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. அதற்கு பின் அது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை. தற்போது வரை தளபதி 66 வில்லன் யார் என்பது தெரியவில்லை. தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் மிக முக்கிய ரோலில் நடிக்கிறார். ஆனால் வில்லன் ரோல் கிடையாது என்றும் ஏற்கனவே கூறி வருகிறார்கள். பீஸ்ட் படத்தில் கடைசி வரை வில்லன் யார் என்பதை சொல்லாமல் வைத்திருந்ததை போல், தளபதி 66 படத்திலும் சஸ்பென்ஸ் வைத்துள்ளனர்.

தளபதி 67 ஷுட்டிங் எப்போ

தளபதி 67 ஷுட்டிங் எப்போ

இந்நிலையில் தளபதி 67 படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளது உறுதியாகி விட்டது. மாஸ்டர் பட டீம் மீண்டும் இணையும் இந்த படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளதாகவும், அக்டோபர் மாதம் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் கூறப்பட்டது. மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்ட அதே மாததத்தில் தளபதி 67 ஷுட்டிங்கும் துவங்கப்பட உள்ளது.

தளபதி 67 வில்லன் இவரா

தளபதி 67 வில்லன் இவரா

இதில் லேட்டஸ்ட் தகவலாக, தளபதி 67 படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் ஹீரோ சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் அனைவரையும் மிரள வைத்து வரும் கேஜிஎஃப் 2 படத்தில் மிரட்டலான, கொடூரமான வில்லனாக சஞ்சய் தத் நடித்திருந்தார். இவர் நடித்த அதீரா கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தளபதி 67 படத்திலும் வில்லன் ரோலில் நடிக்க சஞ்சய் தத்திடம் பேசப்பட்டு வருகிறதாம்.

அடுத்த கேஜிஎஃப் 2 இது தானோ

அடுத்த கேஜிஎஃப் 2 இது தானோ

ஒருவேளை தளபதி 67 படத்தில் வில்லன் ரோலில் நடிக்க சஞ்சய் தத் ஓகே சொல்லி விட்டால், அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், ரஜினிக்காக தயார் செய்து வைத்திருந்த கதையில் தான் விஜய் நடிக்க போகிறார். இந்த கதையை விஜய்க்கு ஏற்றது போல் சில மாற்றங்களை லோகேஷ் செய்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், சஞ்சய் தத்தும் இந்த படத்தில் இணைந்தால் இது இன்னொரு கேஜிஎஃப் 2 படமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X