விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி இவரா... வெளியான லேட்டஸ்ட் அசத்தல் அப்டேட்

சென்னை : உலக நாயகன் கமல் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு பான் வேர்ல்ட் லெவலில் ப்ரொமோஷன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் லேட்டஸ்ட் அப்டேட்டாக படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான ஷுட்டிங்கை கமல், மார்ச் மாத துவக்கத்திலேயே முடித்து விட்டார்.

தீவிர ப்ரொமோஷன்

தீவிர ப்ரொமோஷன்

ஜுன் 3 ம் தேதி விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள், ப்ரொமோஷன் வேலைகள் ஆகியன அதீவிரமாக நடந்து வருகின்றன. விக்ரம் படம் பான் இந்தியன் படமாக வெளியிடப்பட உள்ளதால் நாட்டின் அதிகமான நகரங்களுக்கு செல்லும் ரயில்களில், விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரைந்து ப்ரொமோஷன் செய்து வருகின்றனர்.

பான் வேர்ல்ட் ப்ரொமோஷன்

பான் வேர்ல்ட் ப்ரொமோஷன்

விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஐக்கிய அரபு அமீரகத்திலும், டிரைலர் வெளியீட்டை பிரான்சில் மே 18 ம் தேதி நடக்கும் கென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவித்து, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர். அதிலும் ஆடியோ வெளியீட்டு விழாவில், அபூர் சகோதரர்கள் அண்ணாத்த ஆடுறார் பாடல் ரேஞ்சுக்கு கமல் செம குத்தாட்டம் போட்ட பாடலையும் வெளியிட போவதாக சொல்கிறார்கள். இதனால் மீண்டும் உலக நாயகனின் நடனத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இவரும் படத்தில் இருக்கிறாரா

இவரும் படத்தில் இருக்கிறாரா

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள விக்ரம் படத்தில் பிரபல கன்னட ஹீரோயின் ஷான்வி ஸ்ரீவட்சவா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் பிளாஷ்பேக்கில் வரும் மிக முக்கிமான கேரக்டராம். படத்தில் 10 நிமிடங்களை வந்தாலும் செம அழுத்தமான ரோலில் நடித்திருக்கிறாராம். இந்த பிளாஷ் பேக் காட்சியில் விஜய் சேதுபதியின் கேரக்டரும் வருகிறதாம்.

கமலுக்கு ஜோடி இவரா

கமலுக்கு ஜோடி இவரா

ஏற்கனவே இந்த படத்தில் 10 கோடி செலவு செய்து, பிளாஷ்பேக் காட்சியில் கமலை De Aging VFX டெக்னாலஜி மூலம் 1980 களில் இருந்ததை போல் இளமை தோற்றத்தில் காட்டி உள்ளதாக கூறப்பட்டது. இதனால் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் இளமையான கமலுக்கு ஜோடியாக தான் ஷான்வி நடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அவர் கமலுக்கு ஜோடி தானா அல்லது வேறு ஏதாவது முக்கிய ரோலில் நடித்திருக்கிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X