Don't Miss!
- News
அடேங்கப்பா.. 6 கோடி வருசம் பழசாம்! அயோத்தி கோயிலில் ராமர், சீதை சிலைக்கு நேபாளத்திலிருந்து வந்த பாறை
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு ஹன்சிகா வந்ததற்கு இது தான் காரணமா?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு நடிகை ஹன்சிகா மோத்வானி வருவதை போல் ப்ரோமோ காட்டப்பட்டது. இதனால் ஃபினாலேவிற்கு ஸ்பெஷல் கெஸ்டாக தான் ஹன்சிகா வருகிறார். அதுவும் சிம்பு ஹோஸ்டாக இருப்பதால் பரபரப்பிற்காக தான் ஹன்சிகாவை வரவைக்கிறார்கள் என கூறப்பட்டது.
ஆனால் ஹன்சிகா எதற்காக பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் கெஸ்டாக சென்றார், என்ன காரணம், வீட்டிற்கு போய் அவர் என்ன செய்தார் என்பது பற்றிய முழு விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அவர் சிம்புவிற்காக வரவில்லை, வேறு விஷயத்திற்காக தான் வந்துள்ளார்.
இந்தி
திணிப்பு...
கொந்தளித்த
பிரகாஷ்
ராஜ்...
என்ன
சொன்னாரு
தெரியுமா?

புதிய வெப் சீரிஸ்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான "மை3" தொடரை தயாரித்துள்ளது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் M இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் லீட் ரோலில் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இதுக்கு தான் வந்தாரா
பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இந்த தொடரின் "மை3" தலைப்பை நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் ஆகியோர் பிக்பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுடன் இணைந்து வார இறுதி நிகழ்ச்சியில் வெளியிட்டனர். தமிழில் ஹன்சிகா நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவாகும். இதற்கு முன் தெலுங்கில் Nasha என்ற வெப் சீரிசில் நடத்திருந்தார்.

முதல் தமிழ் வெப்சீரிஸ்
இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறுகையில், இந்த தொடரில் பங்குகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இயக்குநர் ராஜேஷ் அவர்களுடன் பணிபுரிவது மிக இனிமையான அனுபவம், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. உலகளவில் பிரமாண்ட படைப்புகளை தந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் நானும் பங்கு பெறுவது பெருமை. இது என்னுடைய முதல் தமிழ் இணைய தொடர். நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு போன்ற இளம் திறமையாளர்களுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஒரு புதுமையான ரொமான்டிக் காமெடி பயணத்திற்கு தயாராகுங்கள். எங்கள் தொடரின் தலைப்பை தமிழகத்தின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சியில் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்கு நன்றி என்றார்.

இவரின் பெரிய ரசிகன்
நடிகர் முகேன் ராவ் கூறுகையில், நான் இயக்குனர் ராஜேஷ் மற்றும் அவரது படங்களின் பெரிய ரசிகன். அவரது திரைப்படங்களைப் பார்த்து மனதார சிரித்திருக்கிறேன். அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க விரும்பினேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக ராஜேஷ் சாருடன் கைகோர்க்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எனக்கு வழங்கிய வாய்ப்பைப் பெற்றேன். மேலும் அவருடன் பணிபுரிவது ஒரு இனிமையான அனுபவம். இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரியது. இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு நன்றி. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்றார்.

வித்தியாசமான அனுபவம் தரும்
இயக்குநர் ராஜேஷ் M கூறுகையில், இணைய தொடர் இயக்குவது எனக்கே முற்றிலும் புதிதான அனுபவம். மக்களின் திரை அனுபவம் நிறைய மாறிவிட்டது. ஒரு திரைப்படம் சென்றடைவதை விட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்று உலகமெங்கும் கோலோச்சும் நிறுவனத்தில் எனது முதல் இணைய தொடரை இயக்குவது மிக பெருமையாக உள்ளது. தமிழ் இணைய தொடர்களின் போக்கை மாற்றி புதிய அனுபவங்களை அளித்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், 'மை3' தொடர் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இது ஒரு ரொமான்ஸ் காமெடி தொடர், இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும். பிக்பாஸ் ஹவுஸில் எங்கள் தொடரின் டைட்டில் வெளியானது மகிழ்ச்சி.

விரைவில் ஹாட்ஸ்டாரில்
"மை3" தொடர் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். "மை 3" டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்புடன் ஃபர்ஸ்ட்லுக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வெளியிடப்பட உள்ளது.