Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
என்ன நெல்சன்...மாற்றத்திற்கு வாய்ப்பே இல்லையா...தலைவர் 169 க்கும் இது தான் கதையா?
சென்னை : ரஜினி நடிக்க உள்ள தலைவர் 169 படம் பற்றிய தலைவர்கள் வெளியாக துவங்கியதும், சோஷியல் மீடியாவில் டைரக்டர் நெல்சன் திலீப்குமாரை நெட்டிசன்களை செமயாக கலாய்த்து வருகின்றனர்.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்க தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானார் நெல்சன் திலீப்குமார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படமும் சூப்பர் ஹிட் ஆனதால், விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்.
அந்தப்
படத்தில்
தனுஷ்
என்னை
காதலித்தார்...
நடிகை
ஐஸ்வர்யா
ராஜேஷ்!

தலைவர் 169 அறிவிப்பு
விஜய்யை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்க தயாராகி வருகிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நெல்சன் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் நடிப்பதாகவும், அவர் ரஜினிக்கு மகளாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

பிரியங்கா சிவாவுக்கு தங்கையா
முதலில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிறகு பாடல் மட்டும் எழுதுவார் என கூறப்பட்டது. லேட்டஸ்டாக சிவகார்த்திகேயன், ரஜினியின் மகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படியானால் சிவகார்த்திகேயனின் தங்கை ரோலில் தான் பிரியங்கா அருள்மோகன் நடிக்க போகிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் டாக்டர், டான் படங்களைத் தொடர்ந்து தலைவர் 169 படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தான் பிரியங்கா நடிக்க உள்ளதாக மற்றொரு தகவலும் கசிந்துள்ளது.

அதுக்குள்ள கதை லீக் ஆகிடுச்சா
தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் துவக்கப்பட்டு, 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் செய்யப்படும் கூறப்படுகிறது. ஆனால் ஷுட்டிங் துவங்குவதற்கு முன்பே தலைவர் 169 படத்தின் மொத்த கதையும் லீக்காகி உள்ளது. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் கடத்தலை மையமாகக் கொண்ட கதையை கொண்டவை.

இதே கதை தானா
தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் மாலில் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது தான் கதை என்பது பீஸ்ட் டிரைலரில் இருந்து தெளிவாகி உள்ளது. இந்நிலையில் தலைவர் 169 படமும் கடத்தலை மையமாகக் கொண்டது தானாம். ரஜினியின் மகளான பிரியங்காவை தீவிரவாதிகள் கடத்திச் செல்லகிறார்கள். அவரை கண்டுபிடித்து, காப்பாற்றுவது தான் படத்தின் கதை என கூறப்படுகிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
அதே போல் நெல்சனின் முந்தைய படங்களில் நடித்த யோகிபாபு, கிங்ஸ்லே ஆகியோரும் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கதையையும் மாற்ற மாட்டிங்க, நடிகர்களையும் மாற்ற மாட்டிங்க. மாற்றத்திற்கு வாய்ப்பேயில்லையா நெல்சன். தலைவர் படத்திற்காவது கான்செப்ட்டை மாற்றி யோசிங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.