என்ன சொல்றீங்க...தலைவர் 169 ஷுட்டிங் தாமதத்திற்கு இவர் தான் காரணமா... நம்ப முடியலியே
சென்னை : ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தின் ஷுட்டிங்கை துவங்க முடியாமல் தாமதமாகி வருவதற்கு யார் காரணம், என்ன காரணத்திற்காக ஷுட்டிங்கை தள்ளி வைத்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக பிப்ரவரி மாதம் ஸ்பெஷல் வீடியோவுடன் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பீஸ்ட் படத்தின் வேலைகளை முடித்த உடனேயே நெல்சன், தலைவர் 169 படத்தின் வேலைகளை துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கன்ஃபார்ம் செய்த நெல்சன்
ஏப்ரல் 14 ம் தேதி தவைர் 169 படத்திற்கான பூஜை நடத்தப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் ஷுட்டிங் துவங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் தான் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என கூறப்படுகிறது. டைரக்டர் நெல்சனும் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜுலை மாதத்திற்கு பிறகு தான் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என்றார்.

இத்தனை மாதம் காத்திருக்கனுமா
இதனால் ரசிகர்கள் செம அப்செட் ஆகினர். தலைவர் 169 படம் தீபாவளிக்கு ரிலீஸ் என காத்திருந்து, ஏமாற்றம் அடைந்தனர். 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் தலைவர் 169 படம் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுவதால் ரஜினி படத்திற்காக அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமா என ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.

என்னது இவர் தான் காரணமா
ஆனால் இந்த தாமதத்திற்கு காரணம், வேறு யாருமில்லை. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம். ரஜினி தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளாராம். அவர் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிறகு தான் தலைவர் 169 ஷுட்டிங்கை துவங்க திட்டமிட்டுள்ளார்களாம். அது தான் இத்தனை மாத தாமதத்திற்கு காரணமாம்.

இதுக்கு தான் வெயிட்டிங்கா
அதே சமயம், தலைவர் 169 படத்தில் ரஜினியின் மகளாக பிரியங்கா அருள்மோகன் நடிப்பதாகவும், சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசப்பட்டு வருகிறதாம். இதே போல் படத்தில் நடிப்பதற்காக பல நடிகர், நடிகைகளிடம் பேசப்பட்டு வருகிறதாம். இவை முடிவானதும் படத்தின் ஷுட்டிங்கை துவங்கலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் மற்றொரு தகவல் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











