Don't Miss!
- News
வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
துபாயில் செட்டில் ஆக போகிறாரா... பக்காவாக ஸ்கெட்ச் போடும் நயன்தாரா
சென்னை : கோலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்த ஆண்டு புத்தாண்டை துபாயில் கொண்டாடினர். அங்கு புத்தாண்டு கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். சமந்தா, அமலாபால் என பலரும் துபாய் சென்று ஓய்வெடுத்து வருகிறார்கள்.
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலருக்கும் துபாய் அரசும் கோல்டன் விசா வழங்கி கெளரவித்து வருகிறது. இதனால் முன்பெல்லாம் விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்ற நடிகைகள் தற்போது துபாய், துருக்கி, எகிப்து என சென்று வருகிறார்கள். அந்த வரிசையில் லேடி சூப்பர் நயன்தாராவும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் துபாய் சென்றுள்ளார்.
இறங்கின பஸ்லயே ஏத்தி விட்டுட்டாங்கப்பா...புலம்பும் பிக்பாஸ் பிரபலம் யாருன்னு பாருங்க

படங்களில் பிஸி
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவனும் புதிய படம் இயக்குவது, பாடல் எழுதுவது என பிஸியாக இருந்து வருகிறார்.

துபாயில் முகாம்
வழக்கமாக எந்த முக்கியமான நாள் என்றாலும் வெளிநாடு சென்று கொண்டாடுவது, அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும். அப்படி தான் புத்தாண்டை கொண்டாட துபாய் சென்றுள்ளனர் என அனைவரும் நினைத்தனர். ஆனால் புத்தாண்டு முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் துபாயில் தான் இருந்து வருகிறார்கள்.

எதற்கு இத்தனை நாட்கள்
துபாயில் மெஹ்ரின் பெர்சோடாவை சந்தித்தது, ரசிகர்களை சந்தித்தது போன்ற போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். என்ன காரணம், எதற்காக இத்தனை நாட்கள் துபாயில் முகாமிட்டுள்ளனர். நயன்தாரா, காதலருடன் துபாயில் செட்டில் ஆக போகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இவ்வளவு செய்கிறாரா
லேட்டஸ்ட் தகவலின் படி, நயன்தாரா இந்த ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நயன்தாரா. அதோடு சாய் வாலா என்ற டீ நிறுவனத்துடன் பார்ட்னராக இணைந்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தி லிப் பாம் கம்பெனி என்ற அழகு சாதன நிறுவனத்துடன் பங்கு சேர்ந்துள்ளார் நயன்தாரா.

இது தான் காரணமா
இதைத் தொடர்ந்து துபாயில் ரூ.100 கோடி முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் ஒன்றை துவக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்கான ஆலோசனையில் தான் துபாயில் ஈடுபட்டுள்ளாராம் நயன்தாரா. இதற்காக தான் 10 நாட்களுக்கும் மேலாக காதலருடன் துபாயில் தங்கி இருக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, முழு நேரமாக பிசினசை கவனித்து கொள்ள போகிறாராம் நயன்தாரா.