வாடிவாசல் தாமதத்திற்கு இது தான் காரணமா... அப்டேட்டே கொல மாஸா இருக்கே

சென்னை : டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் தியேட்டர்களில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பாலா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சூர்யா. இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

சூர்யா - பாலா இணையும் படத்தில் ஜோதிகா, அதர்வா, கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் வரும் ஏப்ரம் மாதம் துவங்கப்பட உள்ளதாம். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவதால், 3 முதல் 4 மாதங்களில் இந்த படத்தை எடுத்து முடிக்க பாலாவிடம் கேட்டுள்ளாராம் சூர்யா.

தாமதமாகும் வாடிவாசல்

தாமதமாகும் வாடிவாசல்

அதே சமயம் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஆரம்ப கட்ட பணிகளிலேயே இந்த படம் உள்ளது. வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் படம் தாமதமாவதாக வெற்றிமாறன் ஏற்கனவே பல பேட்டிகளில் கூறி உள்ளார். வாடிவாசல் படம் தொடர்ந்து தாமதமாவதால் இந்த படம் கைவிடப்பட்டதாக வேறு தகவல் பரவியது.

எப்போ வாடிவாசல் ஷுட்டிங்

எப்போ வாடிவாசல் ஷுட்டிங்

லேட்டஸ்ட் தகவலின் படி, காளைகளுக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால் தான் படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம். வாடிவாசல் ஷுட்டிங் ஜுலை மாதம் துவங்கப்பட உள்ளதாம். 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வாடிவாசல் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். வாடிவாசல் ஷுட்டிங்கை துவக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறாராம்.

அட இது செம மேட்டரா இருக்கே

அட இது செம மேட்டரா இருக்கே

வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட்டிற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாம். இவற்றில் இருந்து 12 காளைகள் தேர்வு செய்யப்பட்டு, வாடிவாசல் படத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாம். இந்த 12 காளைகளும் படத்தில் முக்கிய கேரக்டர்களாக நடிக்க வைக்கப்பட உள்ளனவாம். இந்த ஆரம்பகட்ட போட்டோகிராபிக் பணிகளை முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகுமாம்.

அப்போ இது தான் காரணமா

அப்போ இது தான் காரணமா

காளைகள் தேர்வு செய்யப்பட்டு, ஸ்பெஷல் பயிற்சி அளிக்க அவகாசம் தேவைப்படுவதால் தான் ஜுலை மாதத்தில் ஷுட்டிங்கை துவக்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த கேப்பில் தான் பாலா படத்தை முடிக்க சூர்யா முடிவு செய்திருக்கிறாராம். முதலில் பாலா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க தான் சூர்யா முடிவு செய்திருந்தாராம். ஆனால் வாடிவாசல் ஷுட்டிங்கை துவங்க கால அவகாசம் தேவைப்படுவதால், லீட் ரோலில் நடிக்க வேண்டும் என பாலா கேட்டுக் கொண்டதால் ஓகே சொல்லி விட்டாராம் சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X