For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தந்தை தனுஷை மகன் யாத்ரா சந்தித்தது இதற்காகத்தானா?... சந்திப்பில் இதுதான் பேசப்பட்டதா?

  |

  சென்னை : நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்துள்ள நிலையில் மகன் யாத்ரா, அப்பா தனுஷை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது... இந்த திடீர் சந்திப்பு எதற்காக... மகனை சந்தித்த போட்டோவை பகிர்ந்த தனுஷ் எதற்காக அப்படி ஒரு கேப்ஷன் பதிவிட்டார் என்ற குழப்பம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

  நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் ஜனவரி 17 ம் தேதி தாங்கள் பிரிய போவதாக அறிவித்தனர். 18 ஆண்டு கால திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதற்கு பிறகு தனுஷோ, ஐஸ்வர்யாவோ சோஷியல் மீடியாவில் வேறு எந்த பதிவையும் பகிரவில்லை. ஆனால் இவர்களின் பிரிவிற்கு என்ன காரணமாக இருக்கும் என பலவிதங்களில் செய்தி பரவி, பரபரப்பாகியது.

  ஹீரோயினாக அறிமுகமாகும் அரபிக்குத்து பாடகி… ஹீரோ யார் தெரியுமா ?ஹீரோயினாக அறிமுகமாகும் அரபிக்குத்து பாடகி… ஹீரோ யார் தெரியுமா ?

  அப்பா - மகன் சந்திப்பு

  அப்பா - மகன் சந்திப்பு

  அதே சமயம் இவர்களின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இவர்கள் இவரும் மீண்டும் சேர வேண்டும், பிள்ளைகளுக்காக இவர்கள் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டு ஒன்று சேர வேண்டும் என பலரும் அக்கறையுடன் கோரிக்கை வைத்து வந்தனர். பிரிவை அறிவித்த பிறகு தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே தங்களின் வேலைகளில் பிஸியாகினர். தனுஷ் தற்போது, அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் பட ஷுட்டிங்கிற்காக ஊட்டியில் உள்ளார். ஷுட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று அப்பாவை தனுஷை சந்தித்துள்ளார் மகன் யாத்ரா.

  தனுஷ் என்ன சொல்ல வருகிறார்

  தனுஷ் என்ன சொல்ல வருகிறார்

  இந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தனுஷ், இதை நான் இதற்கு முன் எங்கே பார்த்தேன் என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். அப்பா-மகனின் இந்த போட்டோ அண்ணன்-தம்பியை போல் உள்ளது. யாத்ரா அப்படியே தனுஷின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கிறாரே என பலர் பாராட்டி, இந்த போட்டோவை லைக் செய்திருந்தாலும், தனுஷின் இந்த கேப்ஷன் குழப்பத்தை ஏற்படுத்தியது.

  லவ்வுக்கு செகண்ட் சான்ஸ்

  லவ்வுக்கு செகண்ட் சான்ஸ்

  இதற்கிடையில் மீடியாக்களுக்கு கொடுத்த பேட்டிகளில், லவ்வுக்கு செகண்ட் சான்ஸ் உண்டு. நமக்கானது நம்மை தேடி வந்தே தீரும். நான் இப்போதும் காதலுடன் இருக்கிறேன் என்றெல்லாம் கூறி இருந்தார். இதனால் தனுஷை பிரியும் முடிவை ஐஸ்வர்யா கைவிட்டு விட்டாரா...மீண்டும் இவர்கள் சேர வேண்டும் என ரசிகர்கள் கூற துவங்கி விட்டனர்.

  பிரியும் முடிவை கைவிட்டார்களா

  பிரியும் முடிவை கைவிட்டார்களா

  தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு முடிவால் ரஜினி கடுமையான மன வேதனையிலும், கோபத்திலும் இருப்பதாக கூறப்பட்டது. ரஜினியை சமாதானப்படுத்துவதற்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்தும் இருவரும் சேர வேண்டும் என இருவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேசி, சமாதான முயற்சியில் இறங்கினார்களாம். இதனால் இருவருமே பிரியும் முடிவை கை விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

  தீவிர முயற்சி எடுக்கும் யாத்ரா

  தீவிர முயற்சி எடுக்கும் யாத்ரா

  இந்த சூழ்நிலையில் தான் மகன் யாத்ரா சென்று தனுஷை சந்தித்துள்ளாராம். 17 வயது மகன் என்பதால் தாய்-தந்தையின் பிரிவை யாத்ரா சுத்தமாக விரும்பவில்லையாம். அப்பாவை சந்தித்த போது இது பற்றி பேசியதாக கூறப்படுகிறது. அப்பா-அம்மாவை எப்படியாவது மீண்டும் சேர்த்து வைக்க அவர் தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர்களின் சமாதானம், மகன் யாத்ராவின் பேச்சு தான் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

  தனுஷிடம் என்ன பேசினார்

  தனுஷிடம் என்ன பேசினார்

  தாத்தா ரஜினி மீதான அதீத பாசம் காரணமாக அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் யாத்ரா, அப்பாவை சென்று பார்த்ததற்கான முக்கிய காரணமாம். தந்தை - தாய்க்கு இடையே பாலமாக இருந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க பேசி வருகிறாராம் யாத்ரா. அப்பா தனுஷை சந்தித்த போது கூட ரஜினியின் விருப்பம் பற்றி யாத்ரா, தனுஷிடம் பேசியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  English summary
  Recently Dhanush's son Yatra met his father in naanae varuven shooting spot. The latest buzz is that what they spoke about in their meeting. Some sources say that Yatra tries to reunite his parents.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X