twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்தின் வலிமை தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனது ஏன்... இது தான் காரணமா

    |

    சென்னை : ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ரஜினியின் அண்ணாத்த படத்துடன், அஜித்தின் வலிமை படம் மோத உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது வலிமை வசூலை பாதிக்கும் என்று கூறப்பட்டது.

    உங்க பேர வச்சு கிண்டல் பண்றாங்க... கண்ணீர் விட்ட 80 வயது ரசிகை.. சர்ப்ரைஸ் கொடுத்த மோகன் லால்! உங்க பேர வச்சு கிண்டல் பண்றாங்க... கண்ணீர் விட்ட 80 வயது ரசிகை.. சர்ப்ரைஸ் கொடுத்த மோகன் லால்!

    ஏற்கனவே 2020 பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ரிலீசாகின. ஆனால் ரஜினி படத்தையும் மிஞ்சி, அஜித்தின் விஸ்வாசம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வசூலை அள்ளி குவித்தது. அதனால் தற்போது ரஜினி படத்தின் வசூல் தான் பாதிக்கப்படும், அஜித் படம் சாதனை படைக்க போவதாக அஜித் ரசிகர்கள் கூறி வந்தனர்.

    கிண்டல் பதிவுகள்

    கிண்டல் பதிவுகள்

    ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் அறிவித்தார். இதனால் ரஜினி படத்துடன் மோதுவதற்கு பயந்து தான், அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அண்ணாத்த ரிலீசாகும் தீபாவளியன்று தான் சிம்புவின் மாநாடு படமும் ரிலீசாக உள்ளது. இதனால் சிம்புவிற்கு இருக்கும் தைரியம் அஜித்திற்கு இல்லையா என்று கூறும் சிலர் கிண்டலாக சோஷியல் மீடியாவில் பதிவிட துவங்கினர்.

    தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ்

    தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ்

    வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படாமல், பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது பல காரணங்கள் கூறப்பட்டன. அதாவது, வலிமை படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவே படக்குழு திட்டமிட்டதாம். அதற்காக தான் சீக்கிரமாக ரஷ்ய ஷுட்டிங்கை முடித்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் செய்து வந்தனர்.

    இது தான் காரணமா

    இது தான் காரணமா

    ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கு முந்தைய நடைமுறையான சிஜி வேலைகள் நடந்து வருகின்றன. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடிக்க போதும் கால அவகாசம் இல்லாததால் தான் படத்தின் ரிலீசை தள்ளி வைத்தனராம். அதோடு சென்சார் சான்றிதழ் பெற குறைந்தபடசம் 50 நாட்களுக்கு முன்பே சென்சார் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை வலிமை படம் சென்சார் குழுவிடம் இதுவரை வலிமை படம் அனுப்பப்படவில்லை.

    அவகாசம் தேவை

    அவகாசம் தேவை

    போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடித்து, சென்சார் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்ப படக்குழுவிற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தான், ரசிகர்கள் அதிகம் எதிர்க்கும் வலிமை படத்தின் ரிலீசில் அவசரம் காட்ட வேண்டாம் என ரிலீஸ் தேதியை பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளனராம்.

    ஒரே நாள் ரிலீஸ் கிடையாது

    ஒரே நாள் ரிலீஸ் கிடையாது

    பீஸ்ட் மற்றும் வலிமை படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் மிக குறைவு என்பதால் இரண்டு படங்களும் நிச்சயம் வெற்றி பெறும் என்றே கணிக்கப்படுகிறது. அதற்கும் தியேட்டரிலும் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்து விடும் என படக்குழு நம்புகிறது.

    அண்ணாத்தக்கு தான் பாதிப்பு

    அண்ணாத்தக்கு தான் பாதிப்பு

    அதுமட்டுமின்றி வலிமை மற்றும் அண்ணாத்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டால் அண்ணாத்த படம் ரிலீஸ் செய்யப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இரண்டு ஆண்டுகளாக அதிகம் எதிர்பார்க்கப்படும் என்பதால் அஜித்தின் வலிமை படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவே தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.

    பேசி விட்டார்களா

    பேசி விட்டார்களா

    இதனால் ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவதுடன், பார்வையாளர்களின் வரத்தும் குறையவே வாய்ப்புள்ளதால் போனி கபூருடன், வெங்கட் பிரபு மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் பேசி படத்தின் ரிலீசை தள்ளி வைக்க சொல்லி கேட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    English summary
    latest sourcers said that valimai need more time for post production and censor preparation. so valimai had avoid diwali release and plan to release pongal release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X