பிக்பாஸ் 5 ப்ரோமோவை குறைத்த விஜய் டிவி... இது தான் காரணமா ?
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் நான்கு சீசன்கள் நிறைவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். ஆனால் முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களால் நமீதா மாரிமுத்து தானாக வெளியேறினார். இரண்டாவது வார எலிமினேஷனில் நாடியா சாங்கும், மூன்றாவது வார நாமினேஷனில் அபிஷேக் ராஜாவும் வெளியேறினர்.

அடுத்த எவிக்ஷன் யார்
இதனால் நான்காவது வாரத்தில் வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் வருகின்றனர். கமல் வரும் வார இறுதி நாளும் வந்து விட்டதால் அவர் இந்த வாரம் என்னவெல்லாம் பேச போகிறார், யாரையெல்லாம் கேள்வி கேட்டு விளாச போகிறார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ப்ரோமோவை குறைத்த விஜய் டிவி
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்களை விஜய் டிவி திடீரென குறைத்துள்ளது, சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய விவாதப் பொருள் ஆகி உள்ளது. ப்ரோமோ என்னாச்சு என கேட்டு நெட்டிசன்கள், விஜய் டிவி அட்மினை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

வரிசையான ப்ரோமோக்கள்
பிக்பாஸ் துவங்கப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வரிசையாக ப்ரோமோக்களை வெளியிட்டு, பரபரப்பை கூட்டி வந்தது விஜய் டிவி. நிகழ்ச்சி துவங்குவதற்கான கவுன்டனிற்கும் ப்ரோமோ வெளியிட்டது. ஒவ்வொரு ப்ரோமோவிலும் வித்தியாசமாக பேசி மக்களை கவர்ந்தார் கமல். பிக்பாஸ் துவங்கிய பிறகும் தினசரி எபிசோட்களுக்கும் மூன்று ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வந்தது.

சீன்கள் எப்போ வரும்
கமல் வரும் வார இறுதி எபிசோட்களுக்கு மட்டும் இரண்டு ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வந்தது. இந்த ப்ரோமோக்களில் பரபரப்பாக காட்டப்படும் சீன்கள் பல எபிசோட்களில் இடம்பெறாமல் இருந்தன. இதனால் இந்த ப்ரோமோவில் வரும் காட்சிகளை எப்போ ஒளிபரப்பு செய்வீர்கள் என நக்கலாக கேட்டு வந்தனர் நெட்டிசன்கள்.

டல் அடிக்க துவங்கி விட்டதா
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் இரண்டு ப்ரோமோக்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் என புரியாமல் ரசிகர்கள் பலர் கேட்டு வருகின்றனர். நிகழ்ச்சி டல் அடிக்க துவங்கி விட்டதால் ப்ரோமோவை குறைத்து விட்டீர்களா என பலர் கேட்க துவங்கி விட்டனர்.

இவர் தான் காரணமா
இன்னும் சிலர், அபிஷேக் ராஜா தான் ப்ரோமோவிற்கு கன்டென்ட் கொடுத்து வந்ததாக சொன்னார்கள். அதனால் தான் அவர் இருந்த வரை அதிக ப்ரோமோக்களை வெளியிட்டு விட்டு, தற்போது அவர் வெளியேறிய பிறகு கன்டென்ட் கிடைக்காமல் ப்ரோமோ எண்ணிக்கையை குறைத்து விட்டீர்களா என கேட்க துவங்கி விட்டனர். அப்படியானால் பிக்பாஸ் ப்ரோமோவிற்கு அபிஷேக் தான் கன்டென்ட் கொடுக்கிறார் என கூறப்பட்டது உண்மை தானா என்று கூட சிலர் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











