டாக்டர் பாரதியின் நிஜக் காதலி யார் தெரியுமா...இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ

சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி ரோலில் நடிக்கும் அருண் பிரசாத்தின் நிஜமான காதலி யார் என்பது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி.,யின் டாப் 5 இடங்களில் உள்ள சீரியல்களில் இதுவும் ஒன்று.

சீரியலில் இருந்து விலகிய ரோஷினி

சீரியலில் இருந்து விலகிய ரோஷினி

மிகவும் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் டைட்டில் ரோலான கண்ணம்மா ரோலில் ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக டாக்டர் பாரதி ரோலில் அருண் பிரசாத் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலகிய பிறகு விதுஷா ஸ்ரீ, கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார்.

 விருது வாங்கிய புது கண்ணம்மா

விருது வாங்கிய புது கண்ணம்மா

சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் விதுஷாவிற்கு Find of the year விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சிறந்த சின்னத்திரை ஹீரோவிற்கான விருது அருண் பிரசாத்திற்கு பாரதி கண்ணம்மா சீரியலுக்காக கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு அது கிடைக்கவில்லை. அதிகமான விருதுகளை பாக்யலட்சுமி சீரியல் தான் பெற்றது.

 டாக்டர் பாரதியின் காதலி இவர் தானா

டாக்டர் பாரதியின் காதலி இவர் தானா

இந்த விருது வழங்கும் விழாவில், ராஜா ராணி 2 சீரியலில் வில்லி அர்ச்சனா ரோலில் நடிக்கும் விஜே அர்ச்சனா சிறந்த வில்லி விருது வழங்கப்பட்டது. அர்ச்சனா மேடையில் இருக்கும் போது தொகுப்பாளர்கள் டிஎன்ஏ டெஸ்ட், டாக்டர் பாரதி என்றெல்லாம் சொல்லி கலாய்த்தனர். இதனால் அருண் பிரசாத், அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

 தீயாய் பரவும் போட்டோஸ்

தீயாய் பரவும் போட்டோஸ்


அருண் பிரசாத்தும், அர்ச்சனாவும் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியன சோஷியல் மீடியாவில் படுவேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களின் காதல் உண்மை தானா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

 இப்படி வேறு ஒன்று போகிறதா

இப்படி வேறு ஒன்று போகிறதா

மற்றொரு தகவலாக அருண் பிரசாத்தும், கண்ணம்மா ரோலில் நடித்த ரோஷினியும் தான் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி சீரியலில் செமயாக ஒர்க்அவுட் ஆனதுடன், சீரியலின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. இருவரும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் கொண்டவர்களாம். இருவருக்கும் பிறந்தநாள் கூட ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரிடையேயான காதல் காரணமாக தான் சீரியலில் இருந்து விலகி, குக் வித் கோமாளியில் பங்கேற்று வருகிறாராம் ரோஷினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X