மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கெட்டப் இதுதானா? காட்டுத் தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

Recommended Video

Don comedy | விழுந்து விழுந்து சிரித்த Don படக்குழு... *Kollywood | Filmibeat Tamil

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படமும் டாக்டர் படத்தை போலவே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து சிவகார்த்திகேயனை செம ஹேப்பி ஆக்கியது.

பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்ததாக மாவீரன் படத்தின் சூட்டிங் ஆரம்பம் ஆகப் போகிறதா? அந்த படத்திற்கான புது கெட்டப்பா இது என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் புதிய கெட்டப்

சிவகார்த்திகேயனின் புதிய கெட்டப்

டான் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து இருந்தார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் கல்லூரி மாணவராகவும், பள்ளி மாணவராகவும், இயக்குநராகவும் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றினார். தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போகிற பிரின்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது வித்தியாசமான புதிய தோற்றத்தில் செம ஹேண்ட்ஸம் ஆக சிவகார்த்திகேயன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

மாவீரன் படத்துக்கா

மாவீரன் படத்துக்கா

பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக மாவீரன் எனும் படத்தில் நடிக்க போகிறாரா சிவகார்த்திகேயன் என்றும் அதற்கான கெட்டப் தான் இதுவா? என்றும் தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், சிவகார்த்திகேயனின் இந்த புதிய லுக் செமயா இருக்கு, மனுஷன் அழகில் மயக்குறாரு என ஏகப்பட்ட ரசிகைகள் லிட்டில் ஹார்ட்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

பிரின்ஸ் கிளைமேக்ஸா

பிரின்ஸ் கிளைமேக்ஸா

தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படம் தள்ளிப் போயுள்ள நிலையில், அதன் கிளைமேக்ஸ் காட்சி ஏதும் எடுக்கப்படுகிறதா? அதில் இந்த கெட்டப்பில் சிவகார்த்திகேயன் வரப் போகிறாரா? என்றும் இயக்குநர் அனுதீப் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பிரின்ஸ் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக்கா வந்திருக்கலாம்

ஃபர்ஸ்ட் லுக்கா வந்திருக்கலாம்

இப்படி அசால்ட்டாக புகைப்படங்கள் வெளியாகாமல் ஏதாவது ஒரு படத்தின் போஸ்டராகவோ ஃபர்ஸ்ட் லுக்காகவோ வந்திருந்தால் இன்னமும் மாஸாக இருந்திருக்கும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சற்றே வருத்தம் அடைந்தாலும், சிவகார்த்திகேயனின் அழகை பார்த்து அவருக்கு சுத்திப் போடுங்கப்பா என கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X