தலைவர் 169 ல் சிவகார்த்திகேயனின் ரோல் இதுவா...இனி டான் இல்லை இது தான்...செம ஹாட் அப்டேட்

சென்னை : ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரோல் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

டான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனை பலரும் கோலிவுட்டின் டான் என அழைத்து வருகிறார்கள். யார் டான் என்பதில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே சமீபத்தில் ஒரு போட்டியே நடந்தது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் டான் என கூப்பிட்டுக் கொண்டனர்.

ஆனால் தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அவர் என்ன ரோலில் நடிக்கிறார் என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளதால் இனி சிவா டான் கிடையாது, அவருக்கு வேறு பட்டம் வர போகிறது என்பதை தற்போதே ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்து விட்டார்கள்.

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க போவதாக பிப்ரவரி மாதம் சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதையும் அறிவித்து விட்டார்கள். தலைவர் 169 ஷுட்டிங் எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஷுட்டிங் பற்றிய உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. லேட்டஸ்ட் தகவலின் படி ஜுலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தலைவர் 169 ஷுட்டிங் துவங்கப்படும் என கூறப்படுகிறது.

தலைவருக்கு யாருப்பா ஜோடி

தலைவருக்கு யாருப்பா ஜோடி

2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தலைவர் 169 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 169 படத்தில் நடிப்பவர்கள் பற்றி பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை வெளியான தகவலின் படி ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யந்திரன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

செம பிளானோட இறங்கி இருக்காங்கப்பா

செம பிளானோட இறங்கி இருக்காங்கப்பா

சமீபத்தில் இந்த படத்தில் பிரபல டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்துள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லையாம். திரைக்கதை உருவாக்கத்திற்காக நெல்சன் திலீப்குமார் டீமுக்கு கே.எஸ்.ரவிக்குமார் உதவி செய்ய போகிறாராம். ஒரு பக்கம் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான கமெண்ட்ஸ், மற்றொரு புறம் கமலின் விக்ரமிற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வெற்றி ஆகியவற்றால் தலைவர் 169 படத்தை எப்படியாவது பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கி விட வேண்டும் என முடிவில் இருக்கிறதாம் படக்குழு. அதனால் தான் ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாரை உதவிக்கு அழைத்திருக்கிறார்களாம்.

சிவகார்த்திகேயன் ரோல் இது

சிவகார்த்திகேயன் ரோல் இது

நெல்சன் இயக்கிய படங்கள் அனைத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலாவது எழுதி உள்ளதால், தலைவர் 169 படத்திலும் அவர் பாட்டு எழுதுவாரா, பாடுவாரா என அனைவரும் கேட்டு வந்த நிலையில், இந்த படத்தில் சிவா முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவலின் படி, தலைவர் 169 படத்தில் ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் இளமை கால ரஜினி ரோலில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறாராம்.

இனி டான் கிடையாது...இது தான்

இனி டான் கிடையாது...இது தான்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டராக மகேந்திரன் நடித்ததால் அவரை அதற்கு பிறகு சின்ன பவானி என்று தான் அனைவரும் அழைத்தார்கள். அது போல் தலைவர் 169 படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை சின்ன தலைவர் என்று அனைவரும் அழைக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி, பாடவும் செய்ய போவதாக ஒரு தகவலும், சிவகார்த்திகேயன் எழுதும் பாடலை சிம்பு பாட உள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X