மொத்த கதையையும் சொன்ன Valimai Glimpse...ரசிகர்கள் ஆர்வம்

சென்னை : அஜித்தின் திரையுலக பயணத்திலேயே மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் படம் வலிமை. படத்தின் ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் சிங்கிள் ஆகியவற்றின் பிரம்மாண்ட வரவேற்பை தொடர்ந்து, வலிமை படத்தின் ஃபஸ்ட் glimpse டீசர் 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

மிரட்டலான பைக் ரேஸ், வில்லன் கார்த்திகேயாவின் மாஸ் காட்டும் வசனம் என அசத்தலாக வெளியான இந்த க்ளிம்ப்ஸில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து படத்தின் முழு கதையையும் கணிக்க முடிகிறது. இது அஜித் ரசிகர்களை கூடுதலாக குஷிப்படுத்தி உள்ளது.

சிறந்த டைரக்டர்

சிறந்த டைரக்டர்

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் சிறந்த டைரக்டர்களில் ஒருவர் தான் என்பதை டைரக்டர் ஹச்.வினோத் இந்த படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த படத்திற்காக பல ஆராய்ச்சிகளை வலுவாக மேற்கொண்டு, சரியான காரணங்களை ஆராய்ந்து, திரைக்கதையை எழுதி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

க்ளூ கொடுத்த டீசர்

க்ளூ கொடுத்த டீசர்

சமீபத்தில் வெளியான வலிமை ஷுட்டிங் ஸ்பாட் பிளாக் அண்ட் ஒயிட் ஃபோட்டோக்களில் Satan's Slaves Motocycle Club என்ற பெயர் சாத்தானின் உருவத்துடன் இடம்பெற்றிருந்தது. அதே உருவம், சமீபத்தில் வெளியான வலிமை க்ளிம்ப்ஸில் கார்த்திகேயா அமர்ந்திருக்கும் இடத்திலும் இடம்பெற்றிருந்தது. இதே போல் இந்த 1.23 நிமிட வீடியோவில், வில்லன் கார்த்திகேயா, நாங்கள் சாத்தானின் அடிமைகள். இது எங்களின் இருட்டு உலகம் என வசனம் பேசுவது போலும் இடம்பெற்றுள்ளது.

இவ்வளவு இருக்கா

இவ்வளவு இருக்கா

Satans Slaves Mc என்பது 1967 களில் இங்கிலாந்தின் சில பகுதிகளில் பிரபலமாக இருந்தது. பிறகு இந்த கிளப் ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது. இந்த கிளப், பல சட்ட விரோத மோட்டார் சைக்கிள் கலாச்சாரத்தை துவக்கி வைத்தது. அதோடு போதை பொருள் கடத்தல், சரக்குகளை திருடுதல், துப்பாக்கிச் சூடு, விபச்சாரம் போன்ற கொடூர குற்றங்களையும் செய்து வந்தது.

இது தான் கதையா

இது தான் கதையா

இது போன்ற சட்ட விரோத மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உலக புகழ்பெற்ற அமெரிக்க டிவி தொடரான Sons Of Anarchy இந்த சட்ட விரோத மோட்டார் சைக்கிள் குற்றங்களை மையமாகக் கொண்டதாகும். வலிமை படமும் இதை மையமாகக் கொண்டது தான். இந்த மோட்டார் சைக்கிள் கிளப், தென்னிந்தியாவை சேர்ந்த போலீஸ் அர்ஜுன் கேரக்டரில் நடித்த அஜித்துடன் எந்த வகையில் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது தான் வலிமை படத்தின் கதை.

அஜித்தின் சிறந்த படம்

அஜித்தின் சிறந்த படம்

அதனால் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்த படம் தான் அஜித்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தில் ஹுமா குரேஷி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்படும் இந்த படம், டீசர் வெளியீட்டால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X