விஜய்யிடம் வெற்றிமாறன் சொன்ன கதை இது தானா...ஓகே சொல்வாரா தளபதி ?
சென்னை : தொலைநோக்கு பார்வை கொண்ட நாவல்களின் கதைகளை தேர்வு செய்து, அவற்றை சினிமாவாக எடுப்பதில் கைதேர்ந்தவர் டைரக்டர் வெற்றிமாறன். அந்த முயற்சியில் தொடர்ந்து அவர் வெற்றியும் பெற்று வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கிய தேசிய விருது பெற்ற படமான விசாரணை படம் Lock Up என்ற நாவலின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான். அடுத்து அவர் இயக்கிய அசுரன் படமும் பூமணி எழுதிய வேட்கை என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்.
தற்போது வெற்றிமாறன், சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படமும் துணைவன் என்ற தமிழ் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்.
அடுத்து சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படமும், சி.எஸ்.செல்லப்பா எழுதிய வாடிவாசல் புத்தகத்தை தழுவி தான் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக தான் சூர்யா, காளைகளுடன் சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். இது ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட கதையாகும்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில், விஜய்யிடம் தான் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், விஜய்யின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் வெற்றிமாறன் கூறி இருந்தார். அப்படி விஜய்யிடம் வெற்றிமாறன் என்ன கதை சொன்னார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் தகவலின் படி, Kota Neelima எழுதிய Shoes of the Dead என்ற புத்தகத்தின் கதையை தான் விஜய்யிடம் சொன்னாராம் வெற்றிமாறன். இது விவசாயிகள் தற்கொலை மற்றும் அதை சுற்றிய வலுவான அரசியலை பற்றியதாம். வெற்றிமாறனின் இந்த கதையில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படமும் விவசாயிகள் பிரச்சனையை பேசியது தான். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், வெற்றமாறன் இயக்க போகும் படத்தில் விஜய் நடித்தால் அதுவும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என கூறப்படுகிறது. ஆனால் வெற்றிமாறனுக்கு இதுவரை விஜய் ஓகே சொல்லவில்லையாம்.
விசாரணை படம் ரிலீசான சமயத்திலேயே இந்த புத்தகத்தின் கதையை படமாக எடுக்க வேண்டும் என வெற்றிமாறன் நினைத்திருந்தாராம். 2016 ல், தனது இந்த விருப்பம் பற்றிய கதையின் ஆசிரியர் நீலிமாவிடமும் வெற்றிமாறன் கூறி உள்ளார். இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்த நீலிமா, வெற்றிமாறன் சினிமாவாக எடுக்க தனது கதையை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி என குறிப்பிட்டிருந்தார்.
அதனால் இந்த கதையை தான் வெற்றிமாறன், விஜய்யிடம் கூறி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. அதே சமயம், விஜய் தற்போது சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட படைப்பான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இதனால் வெற்றிமாறன் படத்திற்கு விஜய் ஓகே சொல்வாரா என தெரியவில்லை.
ஆனால் கோலிவுட்டில் வரிசையாக ஹிட் கொடுத்தும், அதிலும் தேசிய விருதுடன் ஹிட் கொடுக்கும் டைரக்டராக உள்ள வெற்றிமாறனின் இயக்கத்தில் விஜய் விரைவில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். விஜய் விரைவில் வெற்றிமாறனின் கதைக்கு ஓகே சொல்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











