ஆஹா...செம அப்டேட்டா இருக்கே...சூர்யா 41 ல் சூர்யாவின் ரோல் இது தானா?

சென்னை : சூர்யா 41 படத்தில் சூர்யாவின் ரோல் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத இந்த தகவல் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்ட்ர்டைன்மெட் தான் தயாரிக்கிறது. படத்தின் ஷுட்டிங் படு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

 வித்தியாசமான பாலா படம்

வித்தியாசமான பாலா படம்

சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்று வந்தது. கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதிகளில் படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டது. இது வழக்கமான பாலா படங்களை போல் இல்லாமல் வித்தியாசமான கதை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா - பாலா கூட்டணி இணைந்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது.

சூர்யா – பாலா மோதலா

சூர்யா – பாலா மோதலா

இந்நிலையில் சமீபத்தில் சூர்யா, அவசரமாக மும்பை கிளம்பிச் சென்றார். சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிற்கான ஒப்பந்தம் தொடர்பாக மும்பை சென்றார் சூர்யா. ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல் காரணமாக தான் சூர்யா கோபித்துக் கொண்டு ஷுட்டிங்கில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றார் என வதந்தி பரவியது.

 என்னது டைரக்டரை மாத்திட்டாங்களா

என்னது டைரக்டரை மாத்திட்டாங்களா

அதோடு, வாடிவாசல் படத்திற்கு முன் சிறுத்தை சிவாவிற்காக ஒதுக்கப்பட்ட படத்தின் தேதிகளை மாற்றி, அயலான் பட டைரக்டருக்கு சூர்யா கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சூர்யா 41 படத்தில் இருந்து பாலாவை தான் சூர்யா மாற்றி விட்டார் என்றெல்லாம் வதந்தி பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.

சூர்யா 41 அப்டேட்

சூர்யா 41 அப்டேட்

32 நாட்களாக கன்னியாக்குமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் நடந்து வந்த முதல் கட்ட ஷுட்டிங் முடிவடைந்து விட்டதாகவும், இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஜுன் முதல் வாரத்தில் கோவாவில் துவங்கப்பட உள்ளதாகவும். இங்கு பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. சூர்யா 41 படத்தில் வாய் பேச முடியாத மீனவர் கேரக்டரில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது.

Recommended Video

சூர்யாவை பற்றிய ரகசியத்தை சொன்ன சிவகுமார் | Oh My Dog | Arun Vijay
 சூர்யா ரோல் இது தானா

சூர்யா ரோல் இது தானா

இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, சூர்யா 41 படத்தில் சூர்யா, தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள காட்சிகள் தான் கோவாவில் படமாக்கப்பட உள்ளதாம். சூர்யா வயதான கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இரட்டை வேடத்தில் அவர் நடிப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X