மீண்டும் தள்ளி போகும் ஜெர்சி ரிலீஸ்....கேஜிஎஃப் 2 தாக்கமா அல்லது புது பிரச்சனை காரணமா?
மும்பை : ஷாகிப் கபூர் நடித்துள்ள ஜெர்சி படத்தின் ரிலீஸ் தேதி எந்த காரணமும் இல்லாமல் திடீரென மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கேஜிஎஃப் 2 படம் காரணமா அல்லது புதிதாக முளைத்துள்ள பிரச்சனை தான் காரணமா என அனைவரும் கேட்டு வருகின்றனர்.
தெலுங்கில் நானி நடித்து, விளயைாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஜெர்சி. தெலுங்கில் இந்த படம் செம ஹிட்டானதால் அதே பெயரில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். தெலுங்கில் இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது. இந்தியில் ஷாகித் கபூர், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை கெளதம் தின்னனூரி இயக்கி இருந்தார்.

கொரோனாவால் தள்ளி போன ரிலீஸ்
தில் ராஜு, நாக வம்சி, அமன் கில் ஆகியோர் இணைந்து ஜெர்சி படத்தின் இந்தியில் ரீமேக்கை தயாரித்துள்ளனர். இந்த படத்தை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தீபாவளி, டிசம்பர் 31 என பல முறை அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது. ஒரு வழியாக தற்போது ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தனர்.

கேஜிஎஃப் 2, பீஸ்ட் உடன் மோதல்
இதனால் கன்னட ராக் ஸ்டார் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2, விஜய்யின் பீஸ்ட் படங்களுடன் ஜெர்சி படம் மோத உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இருந்தாலும் தில்லாக கேஜிஎஃப் 2 ரிலீசாகும் ஏப்ரல் 14 ம் தேதியே ஜெர்சி படமும் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால் இன்று திடீரென ஜெர்சி படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 22 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனால் இதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை.

5வது முறையாக தள்ளிவைப்பு
கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வசூலை அள்ளி குவித்தது. இதன் இரண்டாம் பாகமான கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்ததாலும், இந்திய அளவில் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படமாகவும் இருப்பதால், அந்த படத்துடன் மோதுவது சரியாக இருக்காது. அது படத்தின் வசூலை நிச்சயம் பாதிக்கும் என்பதால், பயந்து பின்வாங்கி இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.

இப்படி ஒரு பிரச்சனையா
ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி படத்தின் ரிலீசை தள்ளிவைக்க அது காரணம் இல்லையாம். ஜெர்சி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ரஜ்னீஷ் ஜெய்ஸ்வா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளாராம். படக்குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாம். ஆனால் இது பற்றிய படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை. படத்திற்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், படத்தின் ரிலீசை கடைசி நிமிடத்தில் தள்ளி வைத்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

ஜெர்சி படம் ரிலீசாகுமா
ஜெர்சி ரிலீஸ் தள்ளிவைப்பிற்கு கேஜிஎஃப் 2 படம் தான் காரணம் என நினைத்துக் கொண்டிருக்கையில் ஜெர்சி படமும் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் உண்மையான காரணம் பற்றி படக்குழு இதுவரை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











