என்ன சொல்றீங்க.. ஜிபி முத்து வெளியேற முக்கிய காரணமே அவரோட ஆர்மி தானா?கொளுத்திப் போட்ட நெட்டிசன்கள்!

சென்னை: ஓவியாவுக்கு அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஜிபி முத்து தான்.

20 நாள் வரை இருப்பேன்னு சொல்லி வந்த அவர் அதிரடியாக இந்த வாரமே வெளியேற காரணம் வெளியே அவரது ஆர்மியினர் பண்ண அந்த அலப்பறை தான் என்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே ஜிபி முத்துவுக்கு காய்ச்சல் வர ஆரம்பித்தது, மேலும், ஹோம்சிக் வந்தது என்று நமீதா மாரிமுத்தைவை அனுப்பியது போல அனுப்பி விட்டனர் என்று நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

சீசன் 6ன் தூண்

சீசன் 6ன் தூண்

பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை 24 மணி நேரம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் அந்த ஷோவுக்கு பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை. அதே போன்ற நிலைமை தான் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6க்கும் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகுபலி போல வந்த ஜிபி முத்து நிகழ்ச்சியை ஏகப்பட்ட ரசிகர்கள் பார்க்க வைத்தார்.

தலைவர் பதவியே அதுக்குத்தான்

தலைவர் பதவியே அதுக்குத்தான்

இதற்கு முன்னதாக பல சீசன்களில் தலைவர் பதவி கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பும் நடவடிக்கைகள் எல்லாம் அரங்கேறி உள்ளன. மாலை மரியாதை எல்லாம் செய்து இமான் அண்ணாச்சி எல்லாம் வெளியே அனுப்பப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் ஜிபி முத்துவுக்கு தலைவர் பதவி கொடுத்ததன் காரணமே அவரை வெளியேற்றத்தான் என்பது இப்போ புரிகிறது என அவரது ஆர்மியினர் புலம்பி வருகின்றனர்.

வெளியேறிய ஜிபி முத்து

வெளியேறிய ஜிபி முத்து

கமல் எபிசோடு முடிந்ததும் கடந்த வாரமே ஜிபி முத்துவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதுவரை ஆக்டிவாக கலகலப்பாக ஆடி பாடி திரிந்து வந்த மனுஷன் திடீரென சோர்ந்து போய் விட்டாரே என்று பார்த்தால், தொடர்ந்து இந்த வாரம் முழுக்க தலைவர் பதவி கிடைத்தும் வீட்டுக்கு போகணும் என சொல்லிக் கொடுத்த வசனத்தையே சொல்வது போலத்தான் அவரது நடவடிக்கை இருந்து வந்தது. இந்நிலையில், அதிரடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேறி உள்ளார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

ஆர்மி தான் காரணமா

ஆர்மி தான் காரணமா

ஆதாம் பிரச்சனையை வைத்து பிக் பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசனை பயங்கரமாக ஜிபி முத்து ஆர்மியினர் ட்ரோல் செய்யும் போதே, கண்டிப்பாக ஸ்கெட்ச் தனலட்சுமிக்கு இல்லை ஜிபி முத்துவுக்குத்தான் என்றிருந்தோம். தற்போது அதுதான் நடந்திருக்கிறது என்று நெட்டிசன்கள் ஜிபி முத்து ஆர்மியினர் கமலை ஓவராக கலாய்த்ததன் விளைவு தான் இந்த அதிரடி வெளியேற்றம் என்கின்றனர்.

ஓவியாவே அனுப்பியவர்கள்

ஓவியாவே அனுப்பியவர்கள்

நல்லா இருந்த ஓவியாவையே பைத்தியம் பிடித்தவர் போல மாற்றி, தற்கொலை எல்லாம் செய்து கொள்ளும் அளவுக்கு டிராமா போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பினார்கள். ஜிபி முத்துவையும் பக்கா ஸ்கெட்ச் போட்டு வெளியே அனுப்பி விட்டனர் என குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

ஜிபி முத்துவால முடியல

ஜிபி முத்துவால முடியல

அதெல்லாம் இல்லைங்க அவர் ரொம்பவே ஜாலியா இருந்த மனுஷன்.. இப்படி 2 வாரம் ஒரே வீட்டுக்குள்ள அடைத்து வைத்ததும் கஷ்டமாகிடுச்சு.. மேலும், தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட நினைத்த அவர், நமக்கு பிக் பாஸ் எல்லாம் செட் ஆகாது என உஷாராக உடல் நலக் குறைவை காரணம் காட்டி கம்பி நீட்டி விட்டார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X