Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜி.பி.முத்து மீது தனலட்சுமி கோபத்துக்கு காரணம் இதுதானா?..அப்ப பிக்பாஸ் இல்லையா?
பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்கள் தனலட்சுமி ஜிபி முத்து இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது.
தனலட்சுமி வேண்டுமென்றே ஜி பி முத்துவை வம்பிழுப்பதையும், அவருடன் சண்டை போடுவதையும் இரண்டு நாளாக பார்க்கிறோம்.
தனலட்சுமி ஜிபி முத்து மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்பதற்கான காரணம் இப்போது தெரிந்துள்ளது. அதற்கு பிக் பாஸ் காரணம் இல்லையா என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
அதெப்படி
மாப்ள..
ஒருத்தரை
பார்த்தாலே
அடிக்கணும்னு
தோணுது..
பறக்கும்
பிக்
பாஸ்
தனலட்சுமி
மீம்ஸ்!

முதல் நாளிலிருந்தே டீமுக்கு கண்டெண்ட் கொடுக்க ஆரம்பித்த ஜி.பி.முத்து
பிக் பாஸ் சீசன் 6 முதல் நாளில் இருந்து களைகட்ட தொடங்கிவிட்டது அதற்கு முக்கிய காரணம் ஜிபி.முத்து. முத்து முதல் நாள் பிக் பாஸ் வீட்டில் அடி எடுத்து வைத்ததுமே அவர் தனியாக சிக்கிக்கொண்டதை நினைத்து புலம்ப ஆரம்பித்தவுடன் சீசன் களைக்கட்ட ஆரம்பித்துவிட்டது. கமலஹாசன் அவரை கலாய்ப்பதற்காக இன்னும் இரண்டு நாளில் மற்ற போட்டியாளர்கள் வந்துவிடுவார்கள் என்று சொல்ல, "அய்யய்யோ நான் இங்க இருக்க மாட்டேன் சாமி எனக்கு பயமா இருக்கு" அப்படின்னு சொல்ல "என்னங்க இப்படி பயப்படுறீங்க ஆதாம் வராதபோது ஏவாள் எப்படி பயந்து இருப்பாரு" என்று கமல் கேட்க "ஆதாம்மா" என்று ஆச்சரியமாக ஜிபி.முத்து கேட்க அது ஒரு பெரிய மீம்ஸ் ஆக மாறிவிட்டது.

திருவிளையாடலை ஆரம்பித்த பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 மற்ற சீசன்களை விட பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஒரு வாரம் மிகவும் போர் அடிக்கும் பின்னர் பிக்பாஸ் ஏதாவது சண்டை மூட்டி விடுவார். ஆனால் இந்த முறை பிக்பாஸ் உஷாராக முதல் நாளிலிருந்து சண்டையை மூட்டிவிட்டார் அவருடைய திருவிளையாடலை ஆரம்பித்து வைத்தார். அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்களாக வந்துள்ள இளையவர்கள் சிறு விஷயத்திற்கும் சண்டை போட தயாராக இருப்பதை பார்க்கிறோம். இது இன்னும் வசதியாக போய்விட்டது. பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் கொடுப்பதற்காக அணிகளை பிக்பாஸ் பிரித்தார் ஆனால் இது டாஸ்க்குக்கான அணி என்பதை மறந்து அந்த அணியினரே கோஷ்டியாக மாறும் நிலையும் பிக் பாஸில் உருவாகி உள்ளது.

ஜி.பி.முத்துவின் நியாய உணர்வு
ஜி பி முத்துவின் இயல்பான பேச்சு நடத்தை அவர் இருக்கும் இடத்தையே கலகலப்பாக மாற்றி விடுகிறது. இது தவிர ஜிபி. முத்துவை அமுதவாணன் கலாய்ப்பது அது தனியாக கண்டெண்டாக மாறிவிடுகிறது. விஷப்பாட்டில் டீம் என்று ஒவ்வொரு சீசனிலும் ஒரு டீம் உருவாகும் அது போன்று இந்த சீசனிலும் கிளீனிங் டீம் அணியில் உள்ள ஜனனி, ஆயிஷா, தனலட்சுமி மூன்று பேரும் விஷப்பாட்டில் டீமாக மாறினர். ஜிபி.முத்துவிற்கு இயல்பாக உள்ள நியாய உணர்வு காரணமாக அவர் பல இடங்களில் பலருடனும் நட்புடன் நடந்து கொள்வதால் டீமில் உள்ள இந்த மூன்று பேருக்கும் அது பிரச்சினையாக மாற ஒரு கட்டத்தில் மூன்று பேருமே ஜி.பி.முத்து மீது பாய ஆரம்பித்தனர்.

சீசன் 6 -ல் முளைத்த விஷபாட்டில் டீம்
ஆனால் ஆயிஷா, ஜனனி இருவரும் ஜி.பி.முத்துவிடம் அதிக கோபப்படாமல் நட்பு பாராட்டி வருகின்றனர். தனலட்சுமி தங்கள் டீமில் உள்ள ஜி.பி.முத்து மீது அதிக வன்மம் காட்டி வருகிறார். தனலட்சுமி நேற்று ஜி.பி.முத்துவை குறி வைத்து அவர் மீது வன்மத்தை கக்க தொடங்கினார் ஜி.பி.முத்துவை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தார். ஜிபி.முத்து என்னம்மா இப்படி செய்கிறாய் என்று கேட்க போக, என்னை அடிக்க வருகிறாயா? நடிக்கிறாயா? நீ வாபோன்னு மரியாதை இல்லாமல் பேசுகிறாயா? என்றெல்லாம் கேட்டு மேலும் வம்பு இழுத்தார். ஜி.பி.முத்து கண்ணீர் விட்டு அழுதார். ஜிபி. முத்து பிக்பாஸ் சீசன் 6 முக்கியமான போட்டியாளர் அவருக்கு இன்று வெளியே தனியாக ஒரு ஆர்மி உருவாகியுள்ளது.

ஜி.பி.முத்துவுக்கு எதிராக மட்டும் தனலட்சுமி பாய்வது ஏன்
ஜிபி.முத்துவை பகைத்தால் அதனுடைய பாதிப்பு நமக்கு இருக்கும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்க, தனலட்சுமி மட்டும் தொடர்ச்சியாக ஜிபி முத்துவை எப்படி வறுத்தெடுக்கிறார். அவருடன் மட்டும் தனலட்சுமி ஏன் சண்டை போடுகிறார் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கையில் நெட்டிசன்கள் தனலட்சுமி தனியாக வச்சு செஞ்சுட்டு இருக்காங்க. தனலட்சுமிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி அவரை வறுத்தெடுக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க ஜிபி.முத்து மீது தனலட்சுமிக்கு ஏன் இவ்வளவு கோபம் இது பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட பகையா? என்று சமூக வலைதளங்களில் ஒரு டீம் கேள்வி எழுப்ப, இல்லை இல்லை, ஜிபி.முத்து ஒரு டிக்-டாக்கர், தனலட்சுமி ஒரு டிக்-டாக்கர் இதற்கு முன்னரும் ஜி.பி.முத்து மற்றும் தனலட்சுமி சண்டை போட்டுள்ளனராம்.

இது பிக்பாஸ் பகை அல்ல முன் பகை
தனலட்சுமி பல டிக்-டாக்கர்களுடன் சண்டை போட்டுள்ளார். அதிலும் ஜி.பி. முத்து மீது அவருக்கு என்ன கோபம் என்றால் தன்னைப் போன்ற ஒரு சக டிக்-டாக் செய்யும் நபர் இவ்வளவு புகழ் பெற்றுள்ளார் என்ற கோபத்தினாலும், பொறாமையினாலும் வந்தது இந்த கோபம் என்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் வரும் பிரச்சினைகளை வைத்து தனலட்சுமிக்கு வந்த கோபம் அல்ல இது, பல ஆண்டுகளாக உள்ள முன் பகையின் வெளிப்பாடு இது என்று நெட்டிசன்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள்.