கதை இதுதானா? ரெட்டைவேடமா? ‘நானே வருவேன்’ டீசர் சொல்வதென்ன?

தனுஷ், செல்வராகவன், யுவன் இணையும் படம் என்பதால் நானே வருவேன் படத்திற்கு பெருத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நானே வருவேன் பட டீசர் மிரட்டலுடன் வெளி வந்துள்ளது. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா? ஒரே வேடமா என்கிற குழப்பத்தில் நெட்டிசன்கள் உள்ளனர்.

தனுஷ் இரண்டு வேடத்தில் வருவது போல் டீசரில் வெளியானாலும் கூர்ந்து பார்த்தால் அப்படி இருக்க வாய்ப்பில்லை என் நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

 2022 தனுஷுக்கு சூப்பர் ஆண்டு

2022 தனுஷுக்கு சூப்பர் ஆண்டு

நடிகர் தனுஷ் சமீபத்திய தனது குடும்ப பிரச்சினையிலிருந்து அமைதியாகிவிட்டார். எப்போது அவையடக்கத்துடன் நடக்கும் தனுஷ் திருமண பிரிவுக்கு பின்னர் முற்றிலும் ஊடகங்களில் வெளிவராமல் இருந்துவிட்டார். இந்த நேரத்தில் அவரது க்ரே மேன் படம் வெளியானது. அது அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தின் இயக்குநர்கல் தனுஷை பாராட்டி இருந்தனர். அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாக தெரிவித்தனர். தனுஷுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்தது. திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி அதுவும் தியேட்டரில் வெளியாகி 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீசில் இணைந்தது.

இளமையான தோற்றத்தில் முரட்டுத்தனமான தனுஷ்-யுவன் பிஜிஎம்

இளமையான தோற்றத்தில் முரட்டுத்தனமான தனுஷ்-யுவன் பிஜிஎம்

அதுவுமில்லாமல் தனுஷ் அடுத்து வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்கள் வர உள்ளன. இதில் நானே வருவேன் இந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகிறது. இன்று வெளியாகிய தனுஷின் நானே வருவேன் டீசருக்கே ரசிகர்கள் காத்திருந்து கொண்டாடினர். இந்தப்படத்தின் டீசரில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதுபோன்ற காட்சிகள் வருகிறது. ஆரம்பத்தில் தனுஷ் என்ட்ரி ஆகும் சீனுக்கு யுவனின் வழக்கமான பிஜிஎம் கலக்குகிறது. இளமையான தோற்றத்தில் முரட்டுத்தனமாக இருக்கும் தனுஷ் அடுத்தடுத்து ஆட்களை கொல்கிறார். இரண்டு பேருக்கும் குடும்பம் இருப்பது போல் காட்டுகிறார்கள்.

சைக்காலஜிகள் டிராமா மூவி என்பதால் நெட்டிசன்கள் குழப்பம்

சைக்காலஜிகள் டிராமா மூவி என்பதால் நெட்டிசன்கள் குழப்பம்

மற்றொரு தனுஷ் விஐபியில் வரும் தனுஷ் போல் அமைதியாக இருக்கிறார். அவர் கட்டடம் கட்டும் பொறியாளர் வேலையில் இருப்பதுபோல் காட்டுகிறார்கள். முதல் தனுஷுக்கு குழந்தை மனைவி நைவரும் கொல்லப்பட்டது போல் அவர்களை பழி வாங்குவதுபோல் காட்சி உள்ளது. அவர் தேவதையைக் கண்டேன் பாடல் ஸ்டைலில் ஆடுகிறார். கடைசியில் தனுஷ் கழுத்தை இந்த முரட்டு தனுஷ் நெறிப்பது போல் காட்டுகிறார்கள். ஆனால் இது சைகாலஜிகல் டிராமா என்பதால் காட்டப்படும் காட்சிகள் சரியா என்பது தெரியவில்லை என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

ரெட்டையா ஒத்தையா?

ரெட்டையா ஒத்தையா?

படத்தில் காட்டப்படுவது எல்லாம் உண்மையல்ல தனுஷுக்கு இரு வேடம் தான் என்பதும் நிச்சயமல்ல, முதலில் அமைதியான தனுஷ் ஏதோ ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க அவரது குடும்பம் பாதிக்கப்படுகிறது. பின்னர் அவர் வேறு மாதிரி அவதாரம் எடுத்து பழி வாங்குகிறார், அது அவரது உள்ளுணர்வு. எப்போதும் டீசர் ஒரு வகையான போக்கில் ரசிகர்களை செல்லவிட்டு படம் வரும்போது வேறு மாதிரி வரும் தெரியாதா? இரட்டை வேடம் என்றால் இதுவரை இரட்டை வேடம் என உறுதியாக படக்குழுவோ, செல்வராகவனோ சொல்லவில்லையே என நெட்டிசன்கள் வாதம் வைக்கின்றனர். எது எப்படியோபடம் வந்தால் தெரியபோகிறது. இது இரட்டை வேட படமா? தனுஷ் அப்படி மாறி எதிரிகளை பழி வாங்குகிறாரா? என்பது தெரிய போகிறது.

More from Filmibeat

Read more about: nane varuven dhanush
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X