சாமி 2 -வில் அடுத்த தலைமுறை போரா ?- வீடியோ
சென்னை: சாமி 2 படத்தில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சையை அடக்கப்போவது ஆறுச்சாமி இல்லை என்று கூறப்படுகிறது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை(கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) ஆறுச்சாமி(விக்ரம்) கொன்றுவிடுவார்.
இரண்டாம் பாக செட்டில் பெருமாள் பிச்சையின் 29வது நினைவு நாள் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
பாபி சிம்ஹா
பெருமாள் பிச்சையின் மகன்களாக பாபி சிம்ஹா(ராவண பிச்சை), ஜான் விஜய்(தேவேந்திர பிச்சை), ஓஏகே சுந்தர் (மகேந்திர பிச்சை) ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
விக்ரம்
29வது நினைவு நாள் என்றால் நிச்சயம் ஆறுச்சாமிக்கு வயதாகி ஓய்வு பெற்றிருப்பார். அப்படி என்றால் ஆறுச்சாமியின் மகனான மற்றொரு விக்ரம் தான் பெருமாள் பிச்சையின் மகன்களை சமாளிக்க வேண்டும்.
போலீஸ்
சாமி 2 படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் அப்பா ஆறுச்சாமி மற்றும் மகன் விக்ரம் போல. மகனுக்கு தான் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக இருக்கும்.
மாமி
சாமி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமான த்ரிஷா பின்னர் விலகிவிட்டார். விக்ரம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.