»   »  இந்தி வீரத்துக்கு இதுதான் டைட்டிலா? யார் ஹீரோ..?

இந்தி வீரத்துக்கு இதுதான் டைட்டிலா? யார் ஹீரோ..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : அஜித், சிவா கூட்டணியில் 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' என மூன்று ஹிட் படங்கள் வெளியாகிவிட்டன. தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து 'வீரம்' படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

நான்கு சகோதரர்களுக்கு மூத்தவரான அஜித், தனது தம்பிகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் பாசமான அண்ணன். அவர்களுக்கு இடையே வரும் காதல், இவர்களது குடும்பத்தைக் குலைக்க நினைக்கும் வில்லன் ஆகியவற்றைச் சுற்றி நடக்கும் கதைதான் 'வீரம்'.

Is this a title for hindi 'Veeram'?

தமிழைப்போல தெலுங்கிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அஜித்தின் வீரம் படத்தை பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் நடிக்க ரீமேக் செய்யப்பட இருப்பதாக நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் அஜித் நடித்த மூத்த அண்ணன் வேடத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கவிருக்கிறாராம்.

Is this a title for hindi 'Veeram'?

அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த 'டாய்லெட் : ஏக் ப்ரேம் கதா', 'ஜாலி எல்.எல்.பி 2' ஆகிய படங்கள் வெற்றிபெற்றதையடுத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில்தான் அஜித்தின் 'வீரம்' இந்தி ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். இந்தியில் ரீமேக் ஆகும் இந்தப் படத்திற்கு லேண்ட் ஆஃப் லுங்கி (LOL) என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Ajith starrer Veeram's hindi remake is reportedly titled 'Land of lungi'. Akshay Kumar is set to step into the shoes of Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X