»   »  துல்கர் சல்மானின் பாலிவுட் படத்துக்கு இதுதான் டைட்டிலா?

துல்கர் சல்மானின் பாலிவுட் படத்துக்கு இதுதான் டைட்டிலா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : மலையாள சினிமாவைத் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் துல்கர் சல்மான். தமிழ், மலையாளத்தில் பிஸியாக நடிக்கும் இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார்.

துல்கர் அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் மற்றும் கதாநாயகியாக மிதிலா பல்கார் எனும் புதுமுக நடிகையும் நடிக்கிறார்கள். இந்தப் படம் நடிகரும், இயக்குநருமான ஆகாஷ் குரானா இயக்கத்தில் உருவாகிறது.

 Is this a title for the bollywood film of Dulquar Salman?

துல்கர் சல்மான் நடித்த 'சார்லி', பெங்களுர் டேஸ்', 'கம்மட்டிபாடம்' ஆகிய படங்களில் அவரது தேர்ந்த நடிப்பைப் பார்த்துத்தான் அவரைத் தேர்வு செய்ததாகக் கூறியிருக்கிறார் ஆகாஷ் குரானா. வெவ்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் வாழ்வின் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றாகச் சந்திப்பதைப் பற்றிய படமாக இது இருக்குமாம்.

படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே தொடங்கிய நிலையில் படக்குழுவினர் படத்திற்கு 'கர்வம்' என்று பெயர் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.

English summary
Malayalam actor Dulquer salman is all set to make his bollywood debut in Aakash ghurana film. This film was named by 'Karvam'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil