என்னது...கமலின் விக்ரம் படத்தில் இவரும் நடித்துள்ளாரா... அதுவும் இந்த ரோலிலா?
சென்னை : கமலின் விக்ரம் படத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவர் அல்ல இரண்டு டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

பிளானை மாற்றி விக்ரம் டீம்
விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி, பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா மே 15 ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் படத்தின் ஆடியோவை ஐக்கிய அரபு அமீரகத்திலும், டிரைலர் வெளியீட்டை ஃபிரான்ஸ் - கென்ஸ் திரைப்பட விழாவிலும் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அது முடியாமல் போனது.

சொந்த குரலில் பாடிய கமல்
இதனால் டிரைலர் மற்றும் ஆடியோவை ஒரே நாளில் மே 15 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசையில் உருவான இந்த பாடலை கமலே எழுதி, பாடி உள்ளார். பத்தல பத்தல என துவங்கும் இந்த பாடலில் கமலின் செம டான்ஸ் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

ரிலீஸ் சமயத்தில் அப்டேட்
இதற்கிடையில் விக்ரம் படத்தின் போஸ்ட் ப்ரெடக்ஷன் முழுவதுமாக முடிந்து, ப்ரோமோ ஷுட்டும் சமீபத்தில் மும்பையில் முடிந்து விட்டதாம். மே 15 ம் தேதியுடன் படத்தின் மொத்த வேலைகளும் முடிந்து, அவுட் புட்டும் வந்து விடுமாம். படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் சமயத்தில் பல ஆச்சரிய தகவல்கள் படத்தை பற்றி வெளியாகி வருகின்றன.

அட எத்தனை அப்டேட்
முதலில் இந்த படத்தில் De Aging டெக்னாலஜியை பயன்படுத்தி கமலை, 1980 களில் இருந்ததை போல் இளமை தோற்றத்தில் காட்டி உள்ளார்கள் என்ற தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து கமலுக்கு ஜோடியாக பிரபல கன்னட இளம் நடிகை சான்வி ஸ்ரீவட்சவா நடித்துள்ளார். இவர், 10 நிமிடங்களே வரும் பிளாஷ்பேக் சீனில் நடித்துள்ளார் என கூறப்பட்டது. மகள் வயது நடிகையுடன் ஜோடியாக கமல் நடித்துள்ளார் என பரபரப்பாக பேசப்பட்டது.

என்னது இவரும் இருக்காரா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக விக்ரம் படத்தில் சூர்யா, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு தகவலாக சூர்யா மட்டுமின்றி கார்த்தியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா ஏற்கனவே மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கமலுடன் இணைந்து சூர்யா நடித்துள்ளதாக கூறப்படும் தகவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர் என்ன ரோலில் நடித்துள்ளார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











