பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இசைவாணி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
சென்னை : விஜய் டிவியில் ஒளிப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார்.
அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அதிகம் பிரபலமாகாத 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். 52 நாட்களின் முடிவில் நமிதா, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

வைல்ட் கார்டு என்ட்ரி
சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து, எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் உள்ளே அழைத்து வரப்பட்டார். அவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் சின்னத்திரை பிரபல நடிகர் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்தனர்.

எலிமினேட் ஆன இசைவாணி
கடந்த வாரம் பிரபல கானா பாடகியான இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். பல வருடங்களாக கானா பாடல்கள் பாடி ஏராளமான ரசிகர் கூட்டத்தை தனக்கென வைத்துள்ள இசைவாணி, பிபிசி வெளியிட்ட 2020 ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் பெண் ஒருவர் இந்த பட்டியலில் இடம்பெற்றது இதுவே முதல் முறையாகும்.

இவ்வளவு சம்பளமா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இசைவாணி கலந்து கொண்டதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. மொத்தம் 49 நாட்கள் இசைவாணி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் சம்பளமாக இசைவாணிக்கு கொடுக்கப்பட்டதாம். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் போக குறைந்தபட்சம் 7 லட்சம் ரூபாயை இசைவாணி வீட்டிற்கு எடுத்துச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

நாட்களின் அடிப்படையில் சம்பளம்
போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், அதுவும் அவர்களுக்கு கிடைக்கும் ஓட்டுக்கள், ரசிகர்களின் ஆதரவை பொறுத்து சம்பளம் உயரும் என ஏற்கனவே ஒரு தகவல் கூறப்பட்டு வந்தது. போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் எத்தனை நாட்கள் இருக்கிறார்களோ அத்தனை நாட்கள் அவர்களின் சம்பளம் உயரும் என்றும் கூறப்பட்டது.

அப்போ இவங்க சம்பளம்
இது உறுதியான தகவலா என தெரியவில்லை. இருந்தாலும் இது வெளியானது முதல் ரசிகர்கள், 49 வது நாளில் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேறிய இசைவாணிக்கே இவ்வளவு சம்பளம் என்றால், 50 நாட்களை கடந்து டைட்டில் வின் பண்ணுவார், அதிக ரசிகர்களை கொண்டவர் என கூறப்படும் ராஜு, பிரியங்கா போன்றவர்களுக்கு எத்தனை லட்சங்கள் சம்பளமாக பேசப்பட்டிருக்கும் என வாயடைத்து போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications