இன்று காப்பாற்றப்படும் இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நான்காவது வாரத்தின் நிறைவுப் பகுதியை எட்டி உள்ளது. வார இறுதியின் முதல் நாளான இன்று கமல் வர உள்ளதால், இந்த வாரம் யாரெல்லாம் காப்பாற்றப்பட போகிறார்கள், யார் வெளியேற போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா என மூன்று பேர் வெளியேறி உள்ளனர். தற்போது 15 பேர் போட்டியாளர்களாக உள்ள நிலையில், விரைவில் வைல்ட்கார்டு என்ட்ரியாக மற்றொரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.

நாமினேட் ஆன 9 பேர்
இந்த நிலையில் அடுத்து வெளியேற போகிறவரை தேர்வு செய்வதற்கான நாமினேஷன் ப்ராசஸ் இந்த வார துவக்கத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். ஆனால், நாணயங்கள் வைத்திருப்பவருக்கான சிறப்பு சலுகையை பிக்பாஸ் அறிவித்துள்ளதால் இசைவாணி, பாவனி, வருண் ஆகியோர் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள்.

காப்பாற்றப்பட போகிறவர்கள்
இவர்களை தவிர சின்ன பொண்ணு, அநினய், வருண், பிரியங்கா, அக்ஷரா, சுருதி ஆகிய 6 பேரும் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் இருவர் இன்று காப்பாற்றப்பட போகிறார்கள். பிரியங்கா மற்றும் அக்ஷரா இன்று காப்பாற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாவனிக்கு குறும்படம்
இதைத் தொடர்ந்து தாமரையிடம் இருந்து பாவனியின் உதவியுடன், சுருதி காயினை திருடியது பற்றி கமல் விசாரிக்க உள்ளார். சுருதி எடுத்ததே தெரியாது. தான் உதவி செய்யவே இல்லை என மற்றவர்களிடம் கூறியதற்காக பாவனிக்கு இன்று குறும்படம் போடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

டேஞ்சர் ஜோனில் இருப்பவர்கள்
நாமினேஷனில் உள்ள 6 பேரில் இருவர் இன்று காப்பாற்றப்பட உள்ள நிலையில், சின்ன பொண்ணு மற்றும் அபினய் ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் தாமரையிடம் காயினை திருடிய விவகாரத்திற்கு பிறகு மக்களிடம் சுருதி மீதான செல்வாக்கு மளமளவென சரிந்துள்ளதாம். இதனால் யாரும் எதிர்பாராத விதமாக டேஞ்சர் ஜோனில் இருக்கும் போட்டியாளர்கள் பட்டியலில் சுருதி இணைந்துள்ளார்.

வாண்டட்டாக சிக்கிய சுருதி
இதனால் வெளியேற போகிறவர் சுருதியாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் சின்ன பொண்ணுவை விடவும் சுருதி மிக குறைவான ஓட்டுக்களையே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











