கமலின் விக்ரம் பார்க்க நாங்க வேற லெவல் வெயிட்டிங்...இதுல இவங்களும் இருக்காங்களா?
சென்னை : உலக நாயகன் கமல் நடித்துள்ள விக்ரம் படம் பற்றி தினமும் ஆச்சரியப்பட வைக்கும் புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்று விக்ரம் படத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படம் வரும் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆண்டவர் தரிசனத்திற்காக வெயிட்டிங்
கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்த படம் ரிலீசாக போவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பெரிய திரையில் கமலை மீண்டும் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வரும் தமிழ் சினிமா பற்றிய மோசமான விமர்சனங்களுக்கும் கமல் படம் வராதது தான் காரணம் என்று கூட சொல்லி வந்தனர்.

என்னங்க...இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குறீங்க
ரசிகர்களை குஷிப்படுத்த சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறது படக்குழு. இந்த படத்தில் 10 கோடி செலவில் De Aging டெக்னாலஜி மூலம் கமலை 1980களில் இருந்தது போல் இளமை தோற்றத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் காட்ட போகிறார்கள் என சொல்லப்பட்டதுமே ரசிகர்கள் உற்சாகமாகி விட்டனர். அடுத்த ஆச்சரியமாக, படத்தின் ஆடியோ வெளியீட்டை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைக்க போகிறார்களாம்.

வேற லெவல் சம்பவமா இருக்கே
அடுத்த பிரம்மாண்டமாக விக்ரம் படத்தின் டிரைலரை, மே 18 ம் தேதி பிரான்சில் நடைபெற உள்ள 75வது Cannes 2022 திரைப்பட விழாவில் வெளியிட போவதாக அறிவித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்றின் டிரைலர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன் ஆடியோவை வெளியிட உள்ளார்களாம். இதில் அண்ணாத்த ஆடுறார் பாடலை போல் செமயாக கமல் குத்தாட்டம் போடும் பாடல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாம்.

என்னது இவங்களும் இருக்காங்களா
ஏற்கனவே விக்ரம் படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறினார்கள். தற்போது மற்றொரு ஆச்சரியமாக விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்களாம். ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் தர வேண்டும் என்பதற்காக இந்த தகவலை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா, மாதவனின் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் படத்திலும் கெஸ்ட் ரோல் செய்துள்ளார்.

நிஜமா தான் சொல்றீங்களா
இந்த தகவல் வெளியானதும் நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் நிஜமா தானா என கேட்டு வருகின்றனர். கமலின் விக்ரம் படமாக அல்லது நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தில் சூர்யா-கார்த்தி நடித்துள்ளார்களா. நடந்தா நல்லா தான் இருக்கும். ஆனால் நடக்கனுமே என இந்த தகவலை நம்பாமல் பலர் சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











