குந்தவை ரோலுக்கு த்ரிஷா ஓகே வா...ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
சென்னை : பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாக ரிலீசிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. செப்டம்பர் 30 ம்தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் ப்ரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.
இதில் ஆதித்ய கரிகாலன், வந்தியத் தேவன், நந்தினி கேரக்டர்களில் நடிக்கும் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராயின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று குந்தவை ரோலில் நடிக்கும் த்ரிஷாவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்களின் உலகில் தைரியமான பெண் என்ற கேப்ஷனுடன் குந்தவை இளவரசியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பற்றி ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள், குந்தவை ரோலுக்கு த்ரிஷா ஓகே தானா என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

யார் இந்த குந்தவை
ராஜராஜ சோழனின் தங்கையும், சோழ மன்னின் அரசவையில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் தான் குந்தவை. அருள்மொழி வர்மன், ஆதித்ய கரிகாலன், குந்தவை ஆகிய முவரும் சுந்தர சோழனின் பிள்ளைகள். ஆதித்ய கரிகாலனின் நண்பனான வந்தியத்தேவனின் காதல் மனைவி.சோழர் குடும்பத்தில் மிக துணிச்சலான பெண். கிட்டதட்ட பாகுபலி 2 படத்தில் வரும் தேவசேனா கேரக்டரும், குந்தவை கேரக்டரும் ஒன்று தான்.

கார்த்திக்கு ஜோடியாக த்ரிஷா
இதுவரை வெளியான தகவல்களின் படி பார்த்தால் விக்ரமின், நெருங்கிய நண்பர் கார்த்தி. விக்ரமின் தங்கை ரோலில் தான் த்ரிஷா நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக தான் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

யாருடைய கேரக்டரில் யார்
சுந்தர சோழன் - பிரகாஷ் ராஜ், ஆதித்ய கரிகாலன் - விக்ரம்,குந்தவை - த்ரிஷா, அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி, வந்தியத்தேவன் - கார்த்தி, நந்தினி - ஐஸ்வர்யா ராய். இவர்களில் போர் படை தளபதியாக இருந்தாலும் மன்னர்களுக்கு இணையான முக்கியத்துவமான கேரக்டர் கார்த்தி நடிக்கும் வந்தியதேவன் கேரக்டர் தான்.

த்ரிஷா, குந்தவை ரோலுக்கு சரியா
குந்தவையின் அழகு, அறிவு நிறைந்த தோற்றத்திற்கு த்ரிஷா ஓகே தான் என்றாலும் துணிச்சலான வீர மங்கை ரோலுக்கு அவர் சரியா என்றால் கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டும்.த்ரிஷாவின் ரசிகர்களை இதை கொண்டாடினாலும், பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு இது நெருடலையே தந்துள்ளது.கம்பீரம், அழகு, அறிவு தான் குந்தவை கேரக்டரின் அடையாளமாக சொல்லப்படும். அந்த கேரக்டரில் த்ரிஷாவை வைத்து பார்த்தால் அழகு ஓகே. ஆனால் மற்ற இரண்டை பார்த்தால் வேறு யாரையாவது அல்லது அனுஷ்காவையே நடிக்க வைத்திருக்கலாம்.
Recommended Video

ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள்
பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை பற்றி படிக்கும் போது நிச்சயம் தேவசேனா, ருத்ரமாதேவி அனுஷ்கா போன்ற கேரக்டர் தான் மனதில் நிழல் உருவமாக வந்து போகும். இதனால் த்ரிஷாவை போட்டுள்ளது சரியாக படவில்லை என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது. குந்தவை கேரக்டருக்கு அனுஷ்கா தான சரி என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











