»   »  வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவா.. என்ன நடக்கிறது?

வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவா.. என்ன நடக்கிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் கங்கையில் மூழ்கி சாகப் போவதாக தற்கொலைக் கடிதம் எழுதிவிட்டுச் சென்றிருப்பது திரையுலகில் நேற்றிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன் திடீரென உதயமானது வேந்தர் மூவீஸ். இது எஸ்ஆர்எம் நிறுவனத்தின் பச்சைமுத்து எனும் பாரிவேந்தரின் பினாமி நிறுவனம் என்று கூறப்பட்டாலும், 'இல்லை.. அவருக்கும் இந்த நிறுவனத்துக்கும் சம்மந்தமில்லை. இது என் சொந்த நிறுவனம்' என்று கூறி வந்தார் மதன்.

Is Vendhar Movies Madhan absconded?

ஆனாலும் நிறுவனத்தின் லோகாவில் தொடங்கி, படத்தின் ஆரம்ப டைட்டில் வரை அனைத்திலும் பச்சைமுத்துதான் சிரித்துக் கொண்டிருந்தார்.

எஸ்ஆர்எம் நிறுவன அட்மிஷன், மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பரிந்துரை, திரையுலகினருக்கு எஸ்ஆர்எம் செய்த நலத் திட்ட உதவிகள் என பலவற்றிலும் மதனின் பங்கு கணிசமானது என்பார்கள். ஒருகட்டத்துக்குப் பிறகு 'நமக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி?' என மீடியாவும், சினிமாக்காரர்களும் விட்டுவிட்டார்கள்.

இந்த நிலையில்தான் பச்சைமுத்துவுக்கும் மதனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டுள்ளது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஏற்பட்ட விரிசல் இது. பச்சமுத்துவின் கட்டுப்பாட்டை மீறி மதன் செயல்படுவதாக சிலர் போட்டுக் கொடுத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டதால், தனது முக்கியத்துவத்தை மெய்ப்பிக்க மதன் இப்படிச் செய்திருக்கலாம் என்கிறார்கள்.

இப்போது மதன் உண்மையிலேயே கங்கையில் முழுகி சாகப் போய்விட்டாரா என்று கேட்டால், இருவேறு பதில்களைச் சொல்கிறார்கள். அவர் இப்போதைக்கு தலைமறைவாகிவிட்டார் என்பதுதான் உண்மை. விரைவில் வெளிவருவார். பல விவகாரங்கள் வெளியாகும் என்கிறார்கள் ஒரு தரப்பில். வேறு சிலரோ, மதனை கங்கையில் முழுக விட மாட்டார் பச்சமுத்து. விரைவில் தேடிக் கண்டுபிடித்து சமரசமாகிவிடுவார்கள் என்கிறார்கள்.

English summary
Is Vendhar Movies Madhan has really drowned himself at Ganges of absconded for reasons? Here is some new details.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil