அடக்கடவுளே.. ஏகே62 படத்தோட இயக்குநரை மாற்றுகிறாரா அஜித்? விக்னேஷ் சிவனுக்கு பதில் இவரா?

சென்னை: துணிவு திரைப்படம் வாரிசு படத்தை வசூல் ரீதியாக முந்தாத நிலையில், அடுத்த படத்தை மிகவும் கவனமாக செய்ய நடிகர் அஜித் நினைத்திருப்பதாகவும் அதனால், ஏகே62 படத்தின் இயக்குநரையே அஜித் மாற்றப் போவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித்தின் ஏகே63 படத்தை இயக்குநர் அட்லி இயக்கப் போவதாகவும், ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என்றும் ஏகப்பட்ட தகவல்கள் திடீரென வெளியாகி அஜித் ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.

மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இன்னொரு இயக்குநர் பெயரும் அடிபட்டு வருகின்றன.

அதிருப்தியில் லைகா

அதிருப்தியில் லைகா

அஜித்தின் ஏகே62 படத்தையும் ஏகே63 படத்தையும் லைகா நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே62 படத்தை இயக்கப் போவதாகவும் அனிருத் அந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்னமும் ஹீரோயினை கூட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஃபைனல் பண்ணாமல் படப்பிடிப்பை காலம் தாழ்த்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து லைகா அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

விக்னேஷ் சிவன் மாற்றமா

விக்னேஷ் சிவன் மாற்றமா

நடிகர் விஜய்யின் அடுத்த படம் தளபதி 67 என்பதால், அதற்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஏகே62 படத்தை தீபாவளிக்குள் இறக்க லைகா நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும், அதன் காரணமாக இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநரை களமிறக்க லைகா நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் கோலிவுட்டில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

105 கோடி சம்பளம்

105 கோடி சம்பளம்

ஏகே62 படத்தில் தான் முதன் முதலில் நடிகர் அஜித்துக்கு அதிகபட்சமாக 105 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ள நிலையில், அந்த படத்தின் வசூல் மீதான எதிர்பார்ப்பையும் லைகா நிறுவனம் பெரிய அளவில் எதிர்பார்த்து வருவது தான் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்கின்றனர்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில்

அஜித்தின் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன் சமீபத்தில் பாலிவுட்டில் இயக்கிய ஷெர்ஷா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், மீண்டும் அவரை வைத்தே ஏகே62 படத்தை இயக்க முடிவு செய்து வருவதாக பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அடுத்து அட்லி

அடுத்து அட்லி

அதே போல ஏகே63 படத்தையும் இயக்குநர் அட்லியை வைத்து இயக்குவதற்கு ஒட்டுமொத்த முடிவையும் லைகா தரப்பு தான் எடுத்து உள்ளதாகவும் கூறுகின்றனர். நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் ஓவர்சீஸ் மார்க்கெட்டை அவருக்கு பெரிய அளவில் ஓபன் செய்து வைத்துள்ள நிலையில், லைகா அதனை சரியாக பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர்.

அஜித் ஏற்பாரா

அஜித் ஏற்பாரா

இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக அறிவித்து விட்ட நிலையில், இந்த அதிரடி மாற்றத்தை நிச்சயம் அஜித் ஏற்க மாட்டார் என்றே கூறுகின்றனர். இது எந்தளவுக்கு உண்மை என்பது இன்னமும் தெரியவில்லை. இதுதொடர்பான விளக்கத்தை லைகா தரப்பு அல்லது விக்னேஷ் சிவன் உடனடியாக வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் இருந்து மீட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X