»   »  'விஜய் 60' கேரளாவில் நடந்த ரியல் சம்பவமா?

'விஜய் 60' கேரளாவில் நடந்த ரியல் சம்பவமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என காலடி எடுத்து வைக்க முடிவு செய்தார் விஜய். சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழையலாம் என முயன்றபோது ஆட்சியாளர்களை பகைத்துக் கொண்டால் சினிமா கேரியருக்கே ஆபத்து என்பதை சில சம்பவங்களால் உணர்ந்து போன வேகத்திலேயே திரும்பி விட்டார். இனி சினிமா மட்டும் தான் என்று பேட்டி கொடுப்பதை கூட தவிர்த்துவருகிறார்.

Is Vijay 60 based on Kerala real story?

அரசியலுக்கு அச்சாரம் போட்டபோது அதற்காக தமிழில் மட்டும்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். ஆனால் இப்போது தனது மார்க்கெட் விரிவடைய வேண்டும் என்பதற்காக பிற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம். தெறி படத்தின் பெரும்பகுதி கேரளாவில் நடப்பது போல அமைக்கப்பட்டது. இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பரதன் படமும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டதாம். முக்கிய நடிகர்களிலேயே பாதி பேர் மலையாள நடிகர்கள்தான்.

மலையாளத்தின் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தமிழ்நாட்டில் ஓடுவதுபோல மலையாளத்தில் தமிழ் மசாலா படங்கள் சக்கை போடு போடுகின்றன. இதுதான் தளபதியின் மாஸ்டர் ப்ளானுக்கு காரணம்.

English summary
Is the story of Vijay 60 is based on a real life incident in Kerala? Here is an story on that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil