அடிதூள்... தளபதி 68 அப்டேட்டும் வந்தாச்சு... டைரக்டர் யார் தெரியுமா ?
சென்னை : விஜய் தற்போது தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடித்து வருகிறார்.
பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. டிசம்பருக்குள் பீஸ்ட் படத்தின் வேலைகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2022 ம் ஆண்டு கோடை விடுமுறையின் போது பீஸ்ட் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் தளபதி 66 ஷுட்டிங்
இதைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்க போவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, பல அப்டேட்களை வெளியிட்டு விட்டனர். இந்த பிரம்மாண்ட படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளதாகவும், டிசம்பர் மாதம் முதல் டைட்டில் உள்ளிட்டவைகள் வெளியிடப்பட்டு, ஜனவரி மாதத்தில் ஷுட்டிங்கை துவங்க உள்ளதாகவும் டைரக்டர் தரப்பில் கூறப்பட்டது.

மாஸ்டர் கூட்டணியில் தளபதி 67
இதற்கு பிறகு தளபதி 67 படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜே இயக்க போவதாக கூறப்படுகிறது. இதற்கான கதையை லோகேஷ் கனகராஜ் தயார் செய்து விட்டாராம். தற்போது கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் வேலைகளை முடித்த பிறகு, தளபதி 67 படத்தின் அறிவிப்பை அவர் வெளியிடுவார் என கூறப்பட்டது.

தளபதி 68 அப்டேட்டும் வந்தாச்சு
லேட்டஸ்ட் தகவலாக தளபதி 68 படத்தில் பிகில் பட கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாம். விஜய்யும், அட்லீயும் மீண்டும் ஒரு படத்தில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக அட்லீயும் தனது ட்விட்டர் பக்கத்தில், பிகில் வெர்க்கிங் ஸ்டில்களை பகிர்ந்திருந்தார். அதில் அட்லீ மற்றும் விஜய் 5 என்ற எண் பிரிண்ட் செய்யப்பட்ட உடையை அணிந்திருந்தனர்.

பாலிவுட்டில் பிஸியான அட்லீ
இதனால் மீண்டும் ஒரு படத்தில் இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்க சென்று விட்டார். இதனால் தளபதி 68 ல் அட்லீ - விஜய் கூட்டணி இணைய உள்ளதாக நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் தளபதி 68 ஐ இயக்க போவது வெற்றிமாறன் தான் என்ற பேச்சும் ஒரு பக்கம் அடிபடுகிறது.

எப்போ ஷுட்டிங்
ஆனால் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறும் தகவலின் படி தளபதி 68 ஐ இயக்க போவது அட்லீ தானாம். வெற்றிமாறன் கிடையாதாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும், 2023 ம் ஆண்டின் இறுதியிலேயே இந்த படத்தின் வேலைகள் துவங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தளபதி 66, தளபதி 67 படங்களின் வேலைகளை முடித்த பிறகே விஜய், அட்லீ இயக்கும் படத்தின் வேலைகளில் இறங்க போகிறாராம்.

தெறிக்க விடும் ரசிகர்கள்
ஆனால் தளபதி 65 படம் முடிவடைவதற்கு முன்பே தளபதி 68 பற்றிய முதல் அப்டேட் வந்து விட்டதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தளபதி 68 என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டிங்கும் ஆக்கி உள்ளனர். பீஸ்ட் பட அப்டேட்களே இன்னும் முடியவில்லை. அதற்குள் விஜய்யின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புக்கள் வரிசையாக வெளியாகி வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











