Just In
- 45 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 2 hrs ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- Finance
வோடபோனின் சூப்பர் ஆஃபர்.. 50ஜிபி டேட்டா ப்ரீ.. ஜியோ, ஏர்டெல்லில் என்ன சலுகை.. எது பெஸ்ட்!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Sports
ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த நடிகை இல்லை இந்த நடிகையை தான் காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா?
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு நடிகையை காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா தற்போது தெலுங்கு திரையுலகின் பிசியான ஹீரோக்களில் ஒருவர். அவரும், ரஷ்மிகா மந்தனாவும் சேர்ந்து நடித்துள்ள காம்ரேட் படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது. ரிலீஸ் தள்ளித் தள்ளிப் போய் ஒரு வழியாக திரைக்கு வருகிறது.
விஜய் தேவரகொண்டா தற்போது கிராந்தி மாதவ் இயக்கத்தில் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேசிலை சேர்ந்த இசபெல் லெய்ட் என்பவர் நடிக்கிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, இந்த ரவுடி என் சக நடிகரானதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagramlucky me to have this rowdy as my co star! 🤘🏼🤪 @thedeverakonda 🇫🇷🎥🎬
A post shared by Izabelle Leite🌻 (@xoizaleite) on
இசபெல்லின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டா ரொம்ப அழகாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இசபெல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரும், விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பேசத் துவங்கியுள்ளனர். கிராந்தி மாதவ் படத்தில் விஜய் தேவரகொண்டாவின் மனைவியாக நடிக்கிறார் இசபெல். பிரான்ஸ் நாட்டில் செட்டிலான ஜோடியாக அவர்கள் நடிக்கிறார்கள். விஜய் தன் வாழ்வில் இருந்த பெண்கள் பற்றி கூறும் பிளாஷ்பேக்குடன் கதை துவங்குகிறதாம்.
விஜய் தேவரகொண்டாவும் பெல்ஜியத்தை சேர்ந்த வெர்ஜினியும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலிப்பதாக கூறப்படுகிறது. வெர்ஜினி, விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். விஜய் மற்றும் வெர்ஜினி குடும்பத்தார் சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படங்களும் வெளியானது.

விஜய் வெர்ஜினியை தான் திருமணம் செய்யப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. வெர்ஜினி விஜய்யின் பெல்லி சூப்புலு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் விஜய் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. இசபெல் விஜய்யை தனது சக நடிகர் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதனால் அது காதலாக இருக்காது என்கிறார்கள் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள்.
விஜய்யின் பெயர் யாருடனாவது சேர்ந்து அடிபடுவது வழக்கமாகிவிட்டது. அதனால் அவர் காதல் கிசுகிசுக்களை கண்டு கொள்வது இல்லை.