»   »  அனைத்து இயக்குனர்களும் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும்: சிம்புதேவன்

அனைத்து இயக்குனர்களும் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும்: சிம்புதேவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் வருகிறார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் இல்லை இல்லை மூன்று வேடங்களில் ஏன் நான்கு வேடங்களில் வருகிறார் என்று ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்கள்.


இந்நிலையில் இது குறித்து சிம்புதேவன் கூறுகையில்,


படம்

படம்

விஜய் இரட்டை வேடத்தில் வருவதாகவும், மூன்று மற்றும் நான்கு வேடங்களிலும் கூட நடித்துள்ளதாகவும் மக்கள் கூறுகிறார்கள். இது குறித்து நான் எதுவும் கூறியதே இல்லையே. ரசிகர்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.


ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

விஜய், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் பெரிய ஸ்டார்களாக இருந்தாலும் கொஞ்சமும் தலைக்கனம் இல்லாதவர்கள். அவர்களை வேலை வாங்கியது எனக்கு சிரமமாகவே இல்லை. நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் போன்று செயல்பட்டோம்.


சுதீப்

சுதீப்

புலி கதையை எழுதும்போதே விஜய், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரை மனதில் வைத்து தான் எழுதினேன். சுதீப்பிடம் கதை கூறச் சென்றபோது தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்றார். ஆனால் கதையை கேட்ட பிறகு நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினார்.


விஜய்

விஜய்

அனைத்து இயக்குனர்களும் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும். அவர் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடப்பார். விஜய் ஒரு சிறந்த நடிகர். அனைத்து காட்சிகளிலும் முழு ஈடுபாட்டோடு நடித்தார் என்றார் சிம்புதேவன்.


English summary
Director Chimbu Devan has asked the audience to find out for themselves whether Vijay is doing dual role in Puli.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil