டிரெண்டாகும் பனையூர்_பிரியாணி.. அரசியல் என்ட்ரி அறிவிப்பா என ஆடிப் போன திரையுலகம்!

சென்னை: வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், திடீரென தனது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை பனையூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து பிரியாணி விருந்து வைத்துள்ளார் விஜய்.

வாரிசு படத்திற்கு ஏற்பட்ட சிக்கலை எப்படி தீர்க்கலாம் என்கிற ஆலோசனையை கடந்து ஒரு மீட்டிங்காகவே இதனை பலரும் பார்த்து வருகின்றனர்.

ஏனெனில் இதற்கு முன்பாக எந்தவொரு படம் வெளியாவதற்கு முன்பாகவும் விஜய் இப்படியொரு விருந்து வைத்தது இல்லையே, அப்போ அரசியல் அறிவிப்பு வெளியிடப் போகிறாரா என காலையில் இருந்தே #பனையூர்_பிரியாணி ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ரஜினி அரசியலுக்கு வரல

ரஜினி அரசியலுக்கு வரல

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக பல ஆண்டுகள் அறிவித்து வந்த நிலையில், கடைசியில் இனிமேல் தான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என அறிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து சினிமாவில் முழு மூச்சாக ஈடுபட்டு ஜெயிலர், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கமல் கலக்கல

கமல் கலக்கல

ரஜினியை போல அரசியலுக்கு வருவேன் என நெடுங்காலமாக அறிவிக்காமல் திடீரென அதிரடியாக அறிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியை உருவாக்கி தேர்தலை சந்தித்த கமலுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவு அளிக்கவில்லை. கலக்கப் போவது யாரு எனபாடி வந்த கமல்ஹாசன் அரசியலில் களம் கண்ட நிலையில், பெரிதாக கலக்கவில்லை என்கிற நிலையில், அடுத்து சினிமாவில் இருந்து அரசியலில் குதிக்கப் போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் அரசியல் என்ட்ரியா

விஜய் அரசியல் என்ட்ரியா

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் அரசியல் அமைப்பாக மாறி சமீபத்தில் நடைபெற்ற சில தேர்தல்களில் போட்டியிட்டு பல வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். தொடர்ந்து சினிமாவில் நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியான தொல்லைகள் எழுந்து வரும் நிலையில், அரசியலில் அதிகாரப்பூர்வமாக இறங்கி விட திட்டமிட்டுத்தான் இன்றைய சந்திப்பு ஏற்பாட்டை பனையூரில் நடத்தி வருகிறாரா? என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்திலேயே பெரிதாக எதிரொலித்து வருகிறது.

பனையூர் பிரியாணி

பனையூர் பிரியாணி

ஒரு பக்கம் வாரிசு படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டிலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரிய பிரச்சனை கிளம்பி உள்ள நிலையில், இன்று பனையூரில் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார் நடிகர் விஜய் #பனையூர்_பிரியாணி ஹாஷ்டேக் காலை முதலே இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆசிர்வாதம் வாங்கும் காட்சிகளை பார்த்தால், இது வாரிசு படத்துக்கான சந்திப்பு இல்லை என்றும் விஜய் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார் என்பதையே தெளிவாக காட்டுகிறது என்கின்றனர்.

திடீர் சப்போர்ட்

திடீர் சப்போர்ட்

வாரிசு பிரச்சனையை திடீரென சீமான், வேல்முருகன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் கையில் எடுத்துக் கொண்டு நடிகர் விஜய்க்கு சப்போர்ட் செய்வதன் பின்னணியிலும் இந்த அரசியல் தான் இருக்கிறது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. எப்படி இருந்தாலும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் ஹாப்பி

ரசிகர்கள் ஹாப்பி

திடீரென தனது ரசிக மன்ற நிர்வாகிகளை ஒன்றாக ஓரிடத்தில் திரட்டி இப்படியொரு பிரியாணி விருந்து வைத்துள்ள நிலையில், வாரிசு ஆடியோ லாஞ்சுக்கு முன்னதாக தளபதி தரிசனம் கிடைக்கப் போகிறது என்கிற உற்சாகத்தில் ரசிகர்கள் செம ஹாப்பி ஆகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X