வாரிசு செகண்ட் லுக்கும் காப்பியா...ரஜினி படங்களை காப்பி அடிக்கிறாரா விஜய்?
சென்னை : விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து செகண்ட் லுக்கும் காப்பி என்ற சோஷியல் மீடியாவில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
சமீப காலங்களில் விஜய் நடித்த படங்களில் சோஷியல் மீடியாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட படம் என்றால் அது பீஸ்ட் தான். பொதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் என்றாலே அவற்றை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் விஜய்யின் பீஸ்ட் பட டீசர் வெளியானதில் இருந்தே அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.
இது அந்த படத்தின் காப்பி, இந்த படத்தின் காப்பி என விஜய் ரசிகர்களே அதை கிண்டல் செய்தனர். பீஸ்ட் படத்திற்கு தான் அப்படி என பார்த்தால், தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக்கிலேயே காப்பி என்ற பிரச்சனை துவங்கி விட்டது.

செம ஸ்டையிலான ஃபர்ஸ்ட்லுக்
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டது. வாரிசு..The Boss returns என்ற டைட்டிலுடன், விஜய் கோட் சூட்டில் செம ஸ்டையிலாக அமர்ந்திருந்த போஸ்டர் வெளியிடப்பட்டது.
Recommended Video

டைட்டில் சிவாஜி பட காப்பியா
இந்த போஸ்டர் ரஜினி படங்களின் காப்பி என விமர்சனம் எழுந்தது. பொதுவாக The Boss என்ற வார்த்தை ரஜினியின் படங்களுக்கு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவாஜி படத்தை தொடர்ந்து, அடுத்து ரஜினி நடிக்க உள்ள ஜெயிலர் படத்திற்கும் The Boss என்ற வார்த்தையை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

ரஜினியை காப்பியடிக்கிறாரா விஜய்
அதே போல் விஜய், தொடையில் கை வைத்தபடி அமர்ந்திருப்பது ரஜினி ஸ்டையிலை காப்பி அடிப்பது போல் இருந்தது. கையை முழுவதுமாக ஊன்றாமல் இடது கை விரல்களின் நுனியை மட்டும் தொடையில் வைத்து அமர்ந்திருப்பது ரஜினி ஸ்டைல்களில் ஒன்று. படையப்பா, காலா, அண்ணாத்த, பாபா உள்ளிட்ட பல படங்களில் ரஜினி இதே போஸில் அமர்ந்திருப்பார்.

போஸ்டரை வைத்து கதையே சொல்லிட்டாங்க
வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உள்ள பேக்கிரவுண்ட், ரஜினியின் கபாலி பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நினைவு படுத்துவதாக இருந்தது. ஆனால் இதற்கும் ஒரு படி மேலே போய் இந்த ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை வைத்து இது பிரெஞ்சு படமான Larco Winch படத்தின் காப்பியா, ரீமேக்கா என கேட்டு ட்வீட் போட்டார் ப்ளூசட்டை மாறன். அவரையும் விஜய் ரசிகர்கள், ஃபர்ஸ்ட்லுக்கை வைத்தே கதை சொல்லுவியா என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதுவும் ரஜினி பட காப்பி தானா
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளான இன்று வாரிசு படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இதுவும் ரஜினி படத்தின் காப்பி என தகவல் பரவி வருகிறது. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில், ஹீரோ இன்ட்ரோ சீனில் ரஜினி மாட்டு வண்டியில் படுத்தபடி வருவார். அதே போல் தான் விஜய்யும் மாட்டு வண்டியில் படுத்தபடி வருவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கள் சிங்கிளா தான் வரும்
வாரிசு செகண்ட் லுக்கிற்கும், சந்திரமுகியின் ரஜினியின் இன்ட்ரோ சீனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், ரஜினி தனியாக வருவார். விஜய், குழந்தைகளுடன் வருகிறார் என்பது மட்டும் தான். இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுவும் ரஜினி சிவாஜி படத்தில் பேசும் பாப்புலர் டயலாக்கான, பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளா தான் வரும் என கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.

அடுத்த ரஜினி ஆக பார்க்கிறார் விஜய்
விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் போன்ற சில விஷயங்கள் ரஜினியை காப்பி அடிப்பது போல் இருப்பதாக ஏற்கனவே அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. என்ன தான் இருந்தாலும் ரஜினி சீனியர் என்பதால் விஜய் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் பீஸ்ட் படத்தின் விமர்சனங்களை ஓவர் டேக் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட தளபதி 66 படத்தின் போஸ்டர்கள், டைட்டில் என அனைத்தும் ரஜினி படங்களை காப்பி அடிப்பதாக உள்ளது. இதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் அல்லது அடுத்த ரஜினி ஆக விஜய் ட்ரை பண்ணுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











