»   »  விவசாயிகளுக்காக விஷால் அறிவித்த 'ஒத்த ரூபா' திட்டம் சாத்தியமா?

விவசாயிகளுக்காக விஷால் அறிவித்த 'ஒத்த ரூபா' திட்டம் சாத்தியமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அறிமுக விழா நேற்று மாலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் பட தயாரிப்பாளர்களின் தொடர் நஷ்டத்திற்கு காரணம் நடிகர்கள் வாங்கும் தகுதிக்கு மீறிய சம்பளம், படத் தயாரிப்பில் பட்ஜெட்டை அதிகரிக்கும் இயக்குனர்களுமே காரணம். என்கிற குற்றசாட்டு விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும் எந்த நடிகரும், இயக்குனர்களும் இதனை கண்டு கொள்ளவில்லை.

Is Vishal's one rupee donation for Farmers possible?

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய தலைவர் கதாநாயக நடிகரான விஷால். அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான நிர்வாகிகள் தொழில் முறை நடிகர்களும், இயக்குனர்களும் தான். எனவே திரைப்பட தயாரிப்பு துறையில் நடிகர்கள் சம்பள குறைப்பு சம்பந்தமாக முக்கிய அறிவிப்புகள் நிர்வாகிகள் அறிமுக விழாவில்இருக்க கூடும் என திரை துறையினர் எதிர்பார்த்தனர். தலைவர் விஷால் கிருஷ்ணன் தனது தலைவர் உரையில் முதன்மையாக வெளியிட்ட அறிவிப்பு தியேட்டரில்டிக்கெட் விற்பனையில் வாரத்திற்கு ஒரு நாள் விற்கப்படும் டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இது கடை தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை போன்றது என்கிறார் தியேட்டர் உரிமையாளர் ஒருவர். 'இது நடைமுறை சாத்தியமில்லாதது. கஷ்டத்தில் படம் எடுத்து நஷ்டத்தில் படம் ரீலீஸ் செய்யும் தயாரிப்பாளர்கள் மேலும் நஷ்டப்பட்டு ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் தயாரிப்பாளர் எப்படி தருவார்?

முண்னணி நடிகர்கள் படங்கள் அவு ட்ரேட் முறையில் விநியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்த பின் அந்த படத்திற்கும் தயாரிப்பாளருக்கும் தொடர்பு கிடையாது. விலைக்கு வாங்கிய எந்த விநியோகஸ்தரும் லாபம் சம்பாதித்ததாக கடந்த பத்தாண்டுகளாக பத்துக்கும் உட்பட்ட படங்களே. அசலை தேத்தவே போராடும் விநியோகஸ்தரிடமிருந்து டிக்கட்டுக்கு ஒத்த ரூவா எப்படி வாங்க முடியும்?

அடுத்ததாக விநியோகஸ்தரிடமிருந்து பெரிய படங்களை எம்.ஜி அடிப்படையில் திரையிடும் தியேட்டர் உரிமையாளர் கொடுத்த எம்.ஜி தொகையை டிக்கட் விற்பனை மூலம் எடுக்கவே முடியாத நிலையில் தியேட்டர்களை நடத்தி கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாத கரண்ட் பில் கட்ட, கேண்டின், பார்க்கிங் வசூலை நம்பி தியேட்டர்கள் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் டிக்கட்டுக்கு ஒத்த ரூபாய் எப்படி கிடைக்கும்?

சிறு படங்களை தயாரிப்பாளர்களே வாடகை கட்டி திரையிடும் நிலைமை இன்றும் தொடர்கிறது. பல தியேட்டர்களில் வாடகைக்கே வசூல் ஆகாத நிலையில் டிக்கட் முக்கி ஒத்த ரூபாய் எப்படி கிடைக்கும்?

திரைப்பட விநியோகம், தியேட்டர் துறை பற்றிய போதுமான விபரங்கள் தெரியாத நபர்கள் தலைமை பொறுப்புக்கு வந்தால் இது போன்ற அமெச்சூர் தனமான அறிவிப்புகள் வரத் தான் செய்யும்," என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

"விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் போற்றப்பட வேண்டியதுதான். நடிகர்கள் விவசாயிகள் நலன் காக்க தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை நிதியாக தரலாம், வருடத்திற்கு ஒரு படம் சம்பளம் வாங்காமல் நடித்து அதில் கிடைக்கும் வருமானத்தை விவசாயத்தை பாதுகாக்க ஏரி, குளங்களை தூர் வாரி பாதுகாக்கலாம். மரணம் அடைந்த விவசாயிகள் குழந்தைகள் கல்வி செலவை ஏற்க பயன்படுத்தலாம். இதையெல்லாம் விட்டு விட்டு நடைமுறை சாத்தியமில்லாத அறிவிப்பை வெளியிட்டு காமெடி பண்ணிருக்காரு தலைவர் விஷால் கிருஷ்ணா," என்கின்றனர் திரைப்பட துறையினர்.

- ராமானுஜம்

English summary
Is Vishal's one rupee donation for Farmers welfare possible? Here is an analysis.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil