Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
விஜய்சேதுபதியை மனம் திறந்து பாராட்டிய இளையராஜா… என்ன சொன்னார் தெரியுமா ?
சென்னை : தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி இளையராஜா, விஜய்சேதுபதியை வெகுவாக புகழ்ந்து பேசினார்.
இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 மேற்பட்ட படங்களில் ஆறாயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இப்போதும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை, ஏ பியூட்டிபுல் பிரேக் அப் என்ற ஆங்கில படத்திற்கும், வெங்கட் பிரபுவின் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
சீனு
ராமசாமி
என்னோட
மகன்..
மாமனிதன்
படம்
பார்த்த
பாரதிராஜா
நெகிழ்ச்சி!

இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களையும் தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு வைத்து இருக்கிறார். மகிழ்ச்சியானாலும் சரி..சோகமானாலும் சரி.. குதூகலமானாலும் சரி இளையராஜாவின் இசை இல்லாமல் கடந்துவிட முடியாது. மக்களின் மனதோடு ஒன்று கலந்தவர் ராகதேவன் இசைஞானி இளையராஜா.

ட்விட்டரில் இசைஞானி
சோஷியல் மீடியாவில் தலைக்காட்டாது இருந்த இசைஞானி, காலத்திற்கு ஏற்ப தற்போது ட்விட்டரில் வலம் வருகிறார். சமீபத்தில் இளையராஜா ட்விட்டரில் ரசிகர்களின் பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், கொஞ்சம் மழை வந்தால் போதும், மெட்ராஸ் மக்களுக்கு உடனே வெங்காய பஜ்ஜி, டீ மற்றும் ராஜா பாடல் என்று பதிவு செய்திருந்தார். இதற்குப் பதிலளித்த இளையராஜா, ஏதாவது ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்றால் என்னுடைய பாட்டு உங்களுக்கு நிச்சயம் ஞாபகம் வரும் என்று பதிலளித்திருந்தார்.

விஜய்சேதுபதியை பாராட்டிய இளையராஜா
இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் விஜய்சேதுபதி மற்றும் இளையராஜா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய இளையராஜா, விஜய்சேதுபதி நடிப்பது மட்டும் இல்லாமல் புதிய புதிய கதைகளையும், புது இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து, பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த கல்லூரி எப்படி திறமையான மாணவர்களை தேடிப்பிடித்து வாழ்க்கை அளிக்கிறதோ அது போல ஒன்றுமே இல்லாமல் வந்த விஜய்சேதுபதி... ஒன்றுமே இல்லாமல் வந்த இளையராஜா... வாய்ப்பு அளித்து வருகிறோம். ஒன்றுமே இல்லாதவர்களுக்குத்தான் இந்த மனசு இருக்கும் என்றார்.

வெற்றி நிச்சயம்
மாணவர்கள் கனவு காண்பதோடு மட்டும் இல்லாமல், நீங்கள் எதுவாக ஆக வேண்டும் என்பதில் முழுமுயற்சியோடு ஈடுபட்டால், நான் இசையமைப்பாளராகியது போல், நீங்களும் நீங்கள் நினைத்த இடத்தை நிச்சயம் அடையமுடியும். அந்த முனைப்போடு, அந்த உணர்வோடு அல்லும் பகலும் இடைவிடாது உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.

மதுரையில் இளையராஜா
மதுரையில் இன்று 'இசையென்றால் இளையராஜா' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்கனவே, சென்னை மற்றும் கோவையில் அவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், மதுரையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக மதுரை மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக மதுரை சென்ற இளையராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.