இந்த வாரம் எப்படியாவது காப்பாத்துங்க.. கெஞ்சும் இசைவாணி.. ஏன் நல்லா விளையாடி ஜெயிக்கலாமே!

சென்னை: இந்த வாரம் கண்டிப்பாக தான் வெளியேறி விடுவோம் என்கிற பயம் இசைவாணிக்கு வந்து விட்டது.

காயின் திருடும் டாஸ்க்கில் வென்று தன்னை காப்பாற்ற வேண்டும் என பகிரங்கமாக இசைவாணி கெஞ்சுவது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தவங்க தன்னை ஒதுக்கிறாங்கன்னு கமல் சார் கிட்ட சொல்லிட்டு இப்போ அதே மத்தவங்க கிட்ட தன்னை காப்பாத்த ஏன் இசை கேட்கிறாரு என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

காயின் திருடும் டாஸ்க்

காயின் திருடும் டாஸ்க்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரம்பித்த அதே திருடன் போலீஸ் டாஸ்க் இன்னமும் வேற வேற மேக்கப் போட்டு அரங்கேறி கொண்டே இருக்கிறது. அதே பழைய மாவு என புரமோவை பார்த்தே ரசிகர்கள் கழுவி ஊற்றியும் அதே போலவே ஷோவை கெத்தாக நடத்தி வருகிறது பிக் பாஸ் குழு.

வெளியேறாமல் தப்பிக்கலாம்

வெளியேறாமல் தப்பிக்கலாம்

இந்த் டாஸ்க்கில் வெல்பவருக்கு அதீத சக்தி கொடுக்கப்படும் அவர் எலிமினேஷனில் இருந்து தன்னையோ அல்லது எலிமினேட் ஆகப் போகும் நபரையோ காப்பாற்றலாம் என பஞ்ச தந்திர நாணய டாஸ்க் ஆரம்பம் செய்யப்பட்டு யாரையோ காப்பாற்ற பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது.

தாமரைக்கு தருவாங்களா

தாமரைக்கு தருவாங்களா

போன வாரம் பிக் பாஸ் வீட்டு தலைவராக இருந்த தாமரை செல்வி இந்த வாரம் நாமினேஷனில் வந்துள்ள நிலையில், தாமரைக்கு அந்த நாணயம் தேவைப்படுகிறது. ஆனால், மற்ற போட்டியாளர்களிடம் அவர் கேட்க, பிரியங்கா மற்றும் அபிஷேக் உள்ளிட்டவர்கள் தாமரையை காப்பாற்ற போகிறோம் என்றே வெளிப்படையாக சொல்லி வருகின்றனர்.

கெஞ்சும் இசை

கெஞ்சும் இசை

இசைவாணி சிறப்பாக விளையாடி தனது ஆட்டத் திறமையை இப்போது காட்டினாலே ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போட்டு அவரை காப்பாற்றி விடுவார்கள். ஆனால், அதை விட்டு விட்டு யாராவது தனக்கு எடுத்துக் கொடுங்களேன் நான் இன்னும் ஒரு வாரம் இருக்கணும் என கெஞ்சுவது அழகல்ல என நெட்டிசன்கள் இசைவாணியை விளாசி வருகின்றனர்.

இசைக்கு தரல

இசைக்கு தரல

அழகாக ஒரு காயினை அபேஸ் பண்ண மதுமிதாவிடமும் இசைவாணி தன்னை காப்பாற்ற சொல்லி கேட்டார். அதன் பின்னர் பிரியங்கா தனக்கு வேண்டும் என கேட்க குழம்பிப் போன மதுமிதா இசைக்கு அதை தராமல் பிரியங்காவுக்கு அதை கொடுத்தார். பிரியங்காவுக்கு எதுக்கு இந்த காயின் என நெட்டிசன்கள் பிரியங்காவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

யாருக்கு கிடைக்கும்

யாருக்கு கிடைக்கும்

நிச்சயம் அடுத்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என நினைக்கும் போட்டியாளருக்குத் தான் இது பயன்பெறும் என்பது தெரிந்த விஷயம் தான். தாமரைக்கு தான் நிச்சயம் கிடைக்கும் என்றும் சின்ன பொண்ணு வெளியேறுவார் என்றும் கணித்து வருகின்றனர்.

போன முறை ஆஜித்

போன முறை ஆஜித்

போன முறை ரம்யா பாண்டியன் சுரேஷ் தாத்தாவையே வெளியே அனுப்பி தான் பெற்ற எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை ஆஜித்துக்கு கொடுத்து சீக்கிரமே வீட்டை விட்டு வெளியேற இருந்த ஆஜித்தை 80 நாட்களுக்கும் அதிகமாக வீட்டில் இருக்க வைத்து விட்டார். அதே போல இந்த சீசனில் யார் காப்பாற்றப்பட போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X