பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய இசைவாணி.. அபிநய் தான் பாவம்!
சென்னை: நிரூப்பை விட அதிக வாக்குகளை அள்ளி டாப் இடத்திற்கு சென்று விட்ட அபிநயை தேடி போய் எவிக்ஷனுக்கு முன்பாகவே இசைவாணி அந்த காயினை கொடுத்து விட்டார்.
கடைசி மூவரில் நிரூப், ஐக்கி பெர்ரி மற்றும் இசைவாணி இடம்பெற்று இருந்தனர்.
ஐக்கி பெர்ரியும், நிரூப்பும் தான் பொம்மை டாஸ்க்கில் அப்படி விளையாடினார்கள். ஆனால், அவர்களுக்கு குறைவான ஓட்டுக்கள் எப்படி வந்தது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

கடைசி இடத்தில்
கடைசி இடங்களில் இருக்கும் போட்டியாளர்கள் தான் பொதுவாக அடுத்த அடுத்த வாரங்களில் வெளியேறுவார்கள் என்கிற ஒரு கணிப்பு இருக்கும். ஆனால், இந்த சீசனில் கடைசி இடத்தில் இருப்பவர்கள் முதலில் சேவ் ஆகவும் டைட்டில் வின்னர் என நினைப்பவர்கள் கடைசி இடத்துக்கு செல்வதுமாக உள்ளது. நிரூப், இசைவாணி மற்றும் ஐக்கி பெர்ரி மூவரும் கடைசி இடங்களில் இடம்பிடித்தனர்.

ஆதரவு இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே அளவு எடுத்து செய்யப்பட்டதாக சக போட்டியாளர்களால் சொல்லப்படும் நிரூப்பை அதே சக போட்டியாளர்கள் தான் நாமினேஷன் செய்து இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளனர். மக்களும் நிரூப்புக்கு பெரியளவில் ஆதரவை அளிப்பதாக தெரியவில்லை. கடைசி மூவரில் இடம்பிடித்து சேவ் ஆனார் நிரூப்.

இசைவாணிக்கு தெரிஞ்சுடுச்சு
இந்த வாரம் நாமினேஷனை மாற்ற அந்த காயினை பயன்படுத்தாமல் அசால்ட்டாக இருந்த இசைவாணிக்கு நிரூப் காப்பாற்றப்பட்ட போது கூட தான் தான் போவோம். ஐக்கி பெர்ரி நம்மை விட சூப்பராக விளையாடுகிறார் என நினைத்து விட்டு அபிநயிடம் தனது காயினை அதிபுத்திசாலி மாதிரி எடுத்துக் கொடுத்தார்.

இசைவாணி எவிக்டட்
விளம்பர இடைவேளைக்கு பிறகு மீண்டும் வந்த கமல்ஹாசன் தன்னிடம் இருக்கும் எவிக்ஷன் கார்டை காட்டுவதற்கு முன்பே இசையும் ஐக்கி பெர்ரியும் தங்களுக்குள் வெளியேறப் போவது தாங்கள் தான் என போட்டி போட்டுக் கொண்டனர். ஆனால், கடைசியில் ஏற்கனவே கசிந்தது போல இசைவாணியின் பெயரை கமல் காட்ட சந்தோஷத்துடன் வெளியேறினார் இசைவாணி.

அபிநய் பாவம்
இசைவாணி கொடுத்த காயினை வைத்து ஒரு வாரம் கேப்டனாக மாறி தப்பித்து விடலாம். இன்னொரு வாரம் நாமினேஷனை மாற்றிவிடலாம் என மன கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு இருந்த அபிநய்க்கு ஆப்பு வைப்பது போல காயின் வைத்திருக்கும் போட்டியாளர் வெளியேறினால் அவர்களுடனே அந்த காயினும் வெளியே போய்விடும் என சுருதி ஏன் காயினுடன் வெளியே போனார் என்பதை தற்போது தெளிவுபடுத்தி விட்டார். அபிநய் இசைவாணியிடம் இருந்து அந்த காயினை வாங்கி இருக்கவே கூடாது. அதுதான் மக்கள் முன்பாகவே சேவ் பண்றாங்களே என அபிநயை வெளுத்து வாங்கி வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











