அண்ணாச்சியுடன் பேச்சை நிறுத்த நினைக்கிறேன்...ஓப்பனாக சொன்ன இசைவாணி
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 22 ம் நாளான இன்று, இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் மதுமிதா இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து வரும் வாரத்தில் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டது. இந்த வாரம் நெருப்பு ஆற்றலை பயன்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், நாமினேஷனில் இரண்டு பேரை தேர்வு செய்து, அவர்களின் ஃபோட்டோவை தீயில் போட வேண்டும் என கூறப்பட்டது.

நாமினேட் ஆனவர்கள்
இந்த வாரம் சின்ன பொண்ணு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி, வருண்,அபினய், பிரியங்கா, இசைவாணி, பாவனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் இசைவாணி, வருண், பாவனி ஆகியோர் நாணயங்களை வைத்திருப்பதால் அதை பயன்படுத்தி, வேறு யாரையாவது நாமினேட் செய்து விட்டு, உங்களை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா என கேட்டார் பிக்பாஸ்.

பவரை பயன்படுத்தவில்லை
சிறிது நேர யோசனைக்கு பிறகு, மூன்று பேரும் தாங்கள் தனது நாணயத்தின் பவரை பயன்படுத்த விரும்பவில்லை என்றனர். அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் அனைவரையும் அமைதிப்படுத்திய இசைவாணியை தான், நாணயத்தின் பவரை பயன்படுத்தவில்லை என பிக்பாசிடம் சொன்னார். அப்போது குறுக்கிட்ட இமான் அண்ணாச்சி, இதை தான் ஏற்கனவே சொல்லிவிட்டாயே. மறுபடியும் ஏன் சொன்னதை சொல்கிறாய் என கேட்டார்.

கடுப்பான இசைவாணி
இதனால் கடுப்பான இசைவாணி, நான் பிக்பாஸிடம் சொன்னேன். நீங்கள் நாமினேஷனில் இருக்கிறீர்களா என கேட்டார். இது முடிந்த சிறிது நேரத்திலேயே பாவனி ஆகியோருடன் தனியே பேசிக் கொண்டிருந்த இசைவாணி, அண்ணாச்சி பேசுவது என் மனதை புண்படுத்துவதாக உள்ளது. நான் எப்போது பேசினாலும் அதற்கு ஏதாவது ஒன்றை சொல்கிறார். இனி அவரிடம் பேச்சை நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன் என ஓப்பனாக தெரிவித்தார்.

இசைவாணியை எச்சரிக்கும் சுருதி
தொடர்ந்து கார்டன் ஏரியாவிலும் சுருதியிடம், அண்ணாச்சியும் தானே குக்கிங் டீமில் உள்ளார். ஏன் அவர் செல்வதே இல்லை என கேட்கிறார். ஆனால் சுருதி, அவர் போய் விட்டார். நீ அவரை பற்றியே குறை கூறியே பேசுவதை நிறுத்து. இது தவறானது. இது உன்னை வேறு விதமாக காட்டி விடும் என எச்சரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











