மூஞ்சக் காட்டி சோறு போட்டதே இல்லை.. தாமரையை நேருக்கு நேராக எதிர்த்த இசைவாணி.. கமல் கொடுத்த தைரியம்!
சென்னை: எதுவா இருந்தாலும் இனிமே நேருக்கு நேர் பேசிவிடுங்க என இசைவாணிக்கு கமல் தைரியம் கொடுத்த அடுத்த நொடியிலேயே தாமரை செல்வியுடன் சண்டைக்கு சென்று விட்டார் இசைவாணி.
ஞாயிற்றுக் கிழமை எபிசோடு அனல் பறக்க மாட்டேங்குதே எவிக்ஷன் லீக் ஆகி போர் அடிக்குதே என புலம்பியது பிக் பாஸ் டீம் காதுக்கு கேட்டு விட்டது போல.
கமல் முன்பாகவே போட்டியாளர்கள் ஒருத்தருக்கு சண்டை போட்டுக் கொள்வது ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மென்ட்டாக மாறியுள்ளது.

தைரியமா பேசுங்க
ஒவ்வொரு வாரமும் இசைவாணிக்கு அட்வைஸ் கொடுக்கும் வேலையையே செய்து வருகிறார் கமல்ஹாசன் என நெட்டிசன்கல் கலாய்க்கும் அளவுக்கு இந்த வாரமும் அந்த பணி சிறப்பாக நடைபெற்றது. பிக் பாஸே கூப்பிட்டு வார்ன் பண்ண கேப்டனாக நீங்க இருந்தீங்க என்றும் எதை சொல்ல வேண்டும் என்றாலும் நேருக்கு நேராக தைரியமாக பேசிவிடுங்கள் என கமல் இசைவாணியை தெளிவு படுத்தினார்.

பிரேக் விட்டதும்
கமல் சொல்லி விட்டு பிரேக் விட்டு கிளம்பியதும் உடனடியாக தாமரை செல்வி தன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு எதிராக பொங்கி எழுந்தார் இசைவாணி. இசை திடீரென அப்படி கேட்டதும் பதில் ஏதும் சொல்ல முடியாமல் தாமரை திணற ஆரம்பித்து விட்டார்.

மூஞ்சக் காட்டி
காயினை பயன்படுத்தி கேப்டனாக மாறிய இசைவாணியை சர்வராக மாற்றி இருந்தார் பிக் பாஸ். ஆனால், அவர் அதிகாரம் செய்வது போலவே நடந்து கொண்டதாக தாமரை குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், மூஞ்சக் காட்டி ஒரு போதும் நான் உங்களுக்கு சோறு போடவே இல்லை. ஏன் அப்படி சொன்னீங்க என தாமரையின் முகத்துக்கு நேராக வெளுத்து வாங்கி விட்டார்.

தவித்த தாமரை
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, தெரியாம சொல்லிட்டேன் பாப்பா என தாமரை தவித்தபடியே இசைவாணிக்கு அவர் சொன்ன பதிலை பார்த்த நெட்டிசன்கள் தாமரை போலியாக இருக்கிறார் என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பின்னாடி பேசலாமா
தாமரை செல்வியிடம் இசைவாணி நேருக்கு நேராக நெத்தியில் அடித்தாற் போல கேள்வி எழுப்பி தனது கேமை ஆடத் தொடங்கிய நிலையில், இன்னமும் தனக்கு இந்த கேம் புரியவில்லை என மாஸ்க் போட்டுக் கொண்டு திரியும் தாமரை அவரிடம் அப்பவே மறுப்பு தெரிவிக்காமல் ஆமாம்சாமி போட்டுவிட்டு பின்னர் ராஜுவிடம் இசையை பற்றி பேசியதையும் நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











