»   »  அண்ணனால் பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த வாரிசு நடிகர்

அண்ணனால் பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த வாரிசு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இஷான் கட்டார்க்கு ஷாஹீத் கபூர் சொன்ன மந்திரம்!- வீடியோ

மும்பை: இஷான் கட்டார் தனது அண்ணனால் பல பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் அண்ணன் மற்றும் தாய் நீலிமா அஸீம் வழியில் நடிக்க வந்துவிட்டார். ஈரானை சேர்ந்த இயக்குனர் மஜித் மஜிதியின் பியான்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்துள்ளார் இஷான்.

மேலும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி நடிக்கும் தடக் படத்தின் ஹீரோ இஷான் தான். இந்நிலையில் சினிமா பற்றி இஷான் கூறியிருப்பதாவது,

ஆர்வம்

ஆர்வம்

அண்ணன் மற்றும் அம்மாவை பார்த்து நடிப்பு மீது ஆர்வம் வந்தது. என் அண்ணன் இத்தனை ஆண்டுகளாக சோர்வடையாமல் வேலை செய்து வருகிறார். நடிப்பு தான் அவருக்கு உயிர்.

வேலை

வேலை

செய்யும் வேலையை நேர்மையாக செய்ய வேண்டும் என்பதே என் அண்ணன் எனக்கு கூறிய அறிவுரை. மக்கள் பார்க்கிறார்களோ இல்லையோ கேமரா நம் உண்மையான உணர்வுகளையே படம் பிடிக்கும் என்பார் அண்ணன்.

அண்ணன்

அண்ணன்

இன்னாரின் தம்பி, இன்னாரின் மகன் என்பதால் என்னை தேடி வந்த பட வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை. பியான்ட் தி கிளவுட்ஸ் படத்திற்கு முன்பு அத்தகைய வாய்ப்புகளை நிராகரித்துள்ளேன். என் திறமையை பார்த்து வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்கிறேன்.

தம்பி

தம்பி

ஷாஹித் கபூரின் தம்பி என்று பிறர் அழைப்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகத் தேவையில்லை. அது தான் உண்மை. அவரை பார்த்து தான் நடிக்க வந்துள்ளேன் என்கிறார் இஷான்.

English summary
Ishaan Khatter, who is all set to make his feature debut with Iranian filmmaker Majid Majidi's 'Beyond the Cloud', was offered films before 'Beyond the Clouds' but he did not do them as he realised it was because of his mother Neelima Azeem and brother Shahid Kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X