twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு மணி நேரக் காட்சிகளைத் தூக்க வேண்டும்.. கமலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை

    By Sudha
    |

    சென்னை: விஸ்வரூபம ப்டத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகளை வெட்ட வேண்டும் என்று கூறியுள்ளனராம். ஆனால் கிட்டத்தட்ட பாதிப் படத்தை நீக்க வேண்டி வரும் என்பதால், கமல்ஹாசன் இதற்குச் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.

    விஸ்வரூபம் சர்ச்சை தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் எந்தெந்த காட்சிகளையெல்லாம் எதிர்க்கின்றன என்பது குறித்து அரசுத் தரப்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது எதிர்ப்பு தெரிவிக்கப்படும் காட்சிகள் பட்டியலிடப்பட்டனவாம்.

    அதன்படி கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காட்சிகளுக்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவற்றை நீக்கியே ஆக வேண்டும் என்று கூறினவாம்.

    கழுத்தை அறுக்கும் காட்சி

    கழுத்தை அறுக்கும் காட்சி

    ஆப்கானிஸ்தானில் பொதுமக்களை தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொல்வது போன்ற காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.

    குரானை காட்டுவதை நீக்க வேண்டும்

    குரானை காட்டுவதை நீக்க வேண்டும்

    பொதுமக்களை கழுத்தை அறுப்பது போன்ற காட்சியின்போது திருக்குரான் காட்டப்படுகிறது. அதை நீக்க வேண்டும்.

    முல்லா உமர் காட்சிகள் கூடாது

    முல்லா உமர் காட்சிகள் கூடாது

    தீவிரவாத தலைவன் முல்லாஉமர் கோவை, மதுரையில் தங்கி இருந்ததாக இடம்பெற்றுள்ள காட்சிகளையும் நீக்க வேண்டும்.

    சிறார்கள் கையில் துப்பாக்கி காட்சி கூடாது

    சிறார்கள் கையில் துப்பாக்கி காட்சி கூடாது

    முஸ்லிம் சிறுவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்து தீவிரவாத பயிற்சி அளிப்பது போல் உள்ள காட்சிகளையும் நீக்க வேண்டும்.

    நீக்கினால் ரிலீஸ் செய்யலாம்

    நீக்கினால் ரிலீஸ் செய்யலாம்

    இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய காட்சிளை நீக்கி விட்டால் தாராளமாக படத்தை வெளியிடலாம், எதிர்க்க மாட்டோம் என்று கூறியுள்ளனவாம் இஸ்லாமிய அமைப்புகள்.

    கமல் சம்மதிக்கவில்லை

    கமல் சம்மதிக்கவில்லை

    கிட்டத்தட்ட பாதிப் படத்தை நீக்குமாறு இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளனவாம். இதனால் கமல்ஹாசன் இதை ஏற்கவில்லையாம். மாறாக சில காட்சிகளை மட்டும் நீக்க அவர் முன்வந்ததாக தெரிகிறது.

    சென்சார் போர்டு கண்டனம்

    சென்சார் போர்டு கண்டனம்

    இதற்கிடையே தணிக்கை செய்யப்பட்ட விஸ்வரூபம் படத்தை தடை செய்திருப்பதற்கு சென்சார் போர்டு குறை கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன் கூறுகையில், தணிக்கை குழுவினர் பார்த்து சான்றிதழ் அளித்துவிட்டால் அந்த படத்தை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பார்க்கலாம், சென்னை உயர்நீதிமன்றம் இன்று என்ன கூறுகிறது என்று...!

    English summary
    Islamic outfits have urged Actor Kamal Haasan to cut one hour scenes from his movie Viswaroopam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X