சிம்புவை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?... தனுஷை வம்பிழுக்கும் நடவடிக்கையா?
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடனான பிரிவிற்கு பிறகு சமீப நாட்களில் மீடியாவில் தொடர்ந்து பேசு பொருளாக காணப்படுகிறார்.
அவர் எதை சொன்னாலும் எதை செய்தாலும் உடனடியாக மீடியா அதை பரபரப்பு செய்தியாக்கி வருகிறது.
தற்போது முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கியுள்ள அவர், அடுத்தடுத்த ப்ளான்களை செயல்படுத்த தயாராகி வருகிறார்.

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டு இணைந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ள நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து முடிவை வெளியிட்டனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளானது.

அதிகரிக்கும் விவாகரத்துகள்?
சமீப காலங்களில் திரையுலகில் விவாகரத்துகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து முடிவும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறைந்தபட்சம் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையாவது அவர்கள் கருத்தில் கொண்டு இந்த விவாகரத்து முடிவை கைவிட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

கேரியரில் கவனம்
இவர்கள் விவாகரத்தை அறிவித்த போது, தங்களின் முடிவை மதித்து இதை சமாளிக்க தேவையான தனிமனித சுதந்திரத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கேற்றாற் போல இருவரும் தங்களது கேரியரில் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த வேலைகளில் பிசி
நடிகர் தனுஷின் மாறன் படம் நாளைய தினம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இதேபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளில் தன்னை பிசியாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டு வருகிறார்.

படம் இயக்கும் ஐஸ்வர்யா?
இந்நிலையில் அவர் தற்போது படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகியுள்ளார் சிம்பு. அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஐஸ்வர்யா இயக்கத்தில் சிம்பு?
இந்நிலையில் அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனுஷிற்கு போட்டியாளராக ஒரு காலத்தில் சிம்பு கருதப்பட்டார். இருதரப்பு ரசிகர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவங்களும் இருந்தது. இந்நிலையில் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கவுள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











